தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-9252

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள் (அதனால் ஷைத்தான் வெருண்டோடிவிடுவான்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-9252: 9252)

عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حُدِّثْتُ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغِيلَانُ فَأَذِّنُوا»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-9252.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-9036.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين ابن جريج المكي وسعد بن أبي وقاص الزهري ، وباقي رجاله ثقات

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு ஜுரைஜ் அவர்களுக்கும் ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார்.  இப்னு ஜுரைஜ் தனக்கு அறிவித்தவரைப்பற்றி யார் எனக் கூறவில்லை. அவரைப்பற்றிய விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான்கள் இருக்கின்றன என்பது அன்றைய அரபு மக்களின் மூடநம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு இல்லை என்று கூறியதாக சரியான ஹதீஸ்கள் உள்ளன. அதற்கு இது முரணாக உள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பார்க்க: முஸ்லிம்-4472 .

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9252 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30360 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7436 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-2571 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.