தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-17137

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 17137)

حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، يَذْكُرُ

أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ لِيُصَلِّيَ بِهِمْ فَأَبَى عَلَيْهِمْ حَتَّى دَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكَلَكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بَيْتِ زَوْجِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-17137.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-13008.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் என்று கூறப்பட்டிருப்பது அபூஉஸாமா அவர்களின் தவறாகும்.
  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் தமீம் என்பதே சரியாகும். இவர் பலவீனமானவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/565, தக்ரீபுத் தஹ்தீப்-1/604)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4112 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.