தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-29187

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌

29187. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«لَوْ عَرَفْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29187.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-28614.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூமுஆவியா சில நேரம் தத்லீஸ் செய்பவர் என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/551)

இந்த செய்தியில் அபூஇஸ்ஹாக் ஷைபானீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.