தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-29819

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

29819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம் அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறட்டும். அவருக்கு உதவி செய்யப்படும்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அபான் பின் ஸாலிஹ் (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

إِذَا نَفَرَتْ دَابَّةُ أَحَدِكُمْ أَوْ بَعِيرُهُ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ لَا يَرَى بِهَا أَحَدًا، فَلْيَقُلْ: أَعِينُونِي عِبَادَ اللَّهِ، فَإِنَّهُ سَيُعَانُ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29819.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29235.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா

2 . யஸீத் பின் ஹாரூன்

3 . முஹம்மத் பின் இஸ்ஹாக்

4 . அபான் பின் ஸாலிஹ் (ரஹ்)


இந்தச் செய்தியில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. முதலாவது பலவீனம் இதில் இடம்பெறும் முஹம்மது பின் இஸ்ஹாக் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள், தான்நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறினாலே அவரின் அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் மேலுள்ள அறிவிப்பில் இவர் அபான் பின் ஸாலிஹிடம் தான் நேரடியாகக் கேட்டதாக கூறவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

இரண்டாவது பலவீனம் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபான் பின் ஸாலிஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 100க்குப் பிறகு மரணிக்கின்றார். இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலர் விடுபட்டிருக்கிறார்கள். விடுபட்டவர்கள் யார்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமான செய்தி.


2 . இந்தக் கருத்தில் ஸாலிஹ் பின் அபான் என்பவர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29819,


மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-29721.

இப்னு அபூஷைபா

عبد الله بن أبي شيبة

இறப்பு: ஹிஜ்ரி 235


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா

தந்தை பெயர்: அபூஷைபா

இறப்பு: ஹிஜ்ரி 235


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் அபூஷைபா ரஹ் அவர்கள் ஒரு அல்-ஹாஃபிழ் ஆவார். இவர் தஃப்ஸீர், ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவர் ஹிஜ்ரி 235 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அபூஷைபா


ஆதாரம்: muslimscholars.info (30010) · Should verify

யஸீத் பின் ஹாரூன்

يزيد بن هارون

இறப்பு: ஹிஜ்ரி 206, வாஸித்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஸீத் பின் ஹாரூன் பின் வாதி/ஸாதான் பின் ஸாபித்

தந்தை பெயர்: ஹாரூன்

வம்சம்: அஸ்ஸுலைமீ

புனைப்பெயர்: அபூ காலித்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: வாஸித்

பிறப்பு: ஹிஜ்ரி 118, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 206, வாஸித்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஸீத் பின் ஹாரூன் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 118 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். இவர் வாஸித் நகரில் வாழ்ந்து, ஹிஜ்ரி 206 ஆம் ஆண்டு அங்கேயே மரணமடைந்தார்கள். இவர் ஒரு சிறந்த அறிஞர், ஹாஃபிழ் மற்றும் வணக்கசாலி ஆவார்.

இவர் ஹதீஸ்களை மனனம் செய்வதிலும், வணக்க வழிபாடுகளிலும் சிறந்து விளங்கினார். தனது வாழ்வின் பிந்தைய காலத்தில் இவர் கண்பார்வையை இழந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஹுமைத் பின் அபீ ஹுமைத், ஆஸிம் அல்அஹ்வல், இஸ்மாயீல் பின் அபீ காலித், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஹுரைஸ் பின் உஸ்மான், அப்துல்லாஹ் பின் அவ்ன், தாவுத் பின் அபீ ஹிந்த், அல்ஹுஸைன் பின் தக்வான், இப்னு இஸ்ஹாக், ஸயீத் பின் இயாஸ் அல்ஜரீரீ, ஸுஃப்யான் பின் ஹுஸைன்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பகிய்யது பின் வலீத், ஆதம் பின் அபீ இயாஸ், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, யஹ்யா பின் மஈன், அலீ பின் அல்மதீனீ, அபூபக்ர் பின் அபீ ஷைபா, முஹம்மத் பின் பஷ்ஷார் பிந்தார், முஹம்மத் பின் அல்முஸன்னா, முஹம்மத் பின் ஸலாம் அல்ஃபைகந்தீ, ஸுஹைர் பின் ஹர்ப், அம்ர் பின் முஹம்மத் பின் புகைர்

வேறு பெயர்கள்: ஸைத் பின் ஹாரூன், யஸீத் பின் ஹாவ்னா


ஆதாரம்: muslimscholars.info (20472) · Should verify

முஹம்மத் பின் இஸ்ஹாக்

முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார்


முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார் அவர்கள் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் குறை கூறியுள்ளனர்.

1 . ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோர் இவர் அமீருல் முஃமினீன ஃபில்ஹதீஸ்-ஹதீஸ்கலையில் முஃமின்களின் தலைவர் என்று கூறியுள்ளனர்.

2 . அபூமுஆவியா அள்ளரீர் அவர்கள், இவர் மக்களில் நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

3 . ஸுஃப்யான் பின் உயைனா அவர்கள், இவரின் சபையில்  70 வருடத்திற்குமேல் அமர்ந்து ஹதீஸ்களை கேட்டுள்ளேன். மதீனாவாசிகள் யாரும் இவரை பொய்யர் என சந்தேகிக்கவில்லை. இவரைப் பற்றி விமர்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

4 . இப்னு நுமைர் அவர்கள், இவர் அறியப்பட்டவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தர செய்திகளாகும். அறியப்படாதவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். இவர் அறியப்படாதவர்களிடமிருந்து தவறான செய்திகளை அறிவித்திருப்பதே இவர் பற்றிய விமர்சனம் ஆகும் என்று கூறியுள்ளார்.

5 . இப்னுல் மதீனீ அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை சரியானவை என்றும், சிலவை ஹஸன் தர செய்திகள் என்றும் கூறியுள்ளார்...

6 . இஜ்லீ அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.

7 . அபூஸுர்ஆ அர்ராஸீ, கதீப் பக்தாதீ, தஹபீ, இப்னு ஹஜர் ஆகியோர் இவர் ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் அதாவது நடுத்தரமானவர், சுமாரானவர் என்றக் கருத்தில் கூறியுள்ளனர்.

1 . கத்ரிய்யா கொள்கையுடைவர்.

2 . ஷீஆ கொள்கையுடைவர்.

பித்அத் கொள்கையுடையவர்கள், நினைவாற்றலிலும், நம்பகத்தன்மையிலும் சரியானவர்களாக இருந்து தனது பித்அத்தை மக்களிடம் பரப்பாதவர்களாகவும், தனது பித்அத்தை நியாயபடுத்தும் செய்திகளை அறிவிக்காதவர்களாகவும் இருந்தால் அவர்களின் அறிவிப்புகளை ஏற்கலாம் என்பதின்படி இவரிடம் குறையில்லை.

3 . இமாம் அஹ்மத், தாரகுத்னீ ஆகியோர் இவர் தத்லீஸ்  செய்பவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் தாரகுத்னீ அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்படி இவர் தத்லீஸ் செய்திருந்தால் அதை ஏற்கக் கூடாது. தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தால் ஏற்கலாம்.

4 . சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார்.

5 . சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்.

இவர் சில செய்திகளை தனித்து அறிவித்திருப்பதற்கும், பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்திருப்பதற்கும் காரணம் எல்லோரிடமிருந்தும் இவர் ஹதீஸை கேட்டுக் கொள்வார் என்பதாகும். எனவே தான் இப்னு நுமைர் அவர்கள் இவர் அறியப்பட்டவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தர செய்திகளாகும். அறியப்படாதவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். இவர் அறியப்படாதவர்களிடமிருந்து தவறான செய்திகளை அறிவித்திருப்பதே இவர் பற்றிய விமர்சனம் ஆகும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தின்படியே இவரின் செய்திகளை சிலர் விமர்சித்துள்ளனர்.

எனவே இந்தக் குறையுள்ள செய்திகளில் மட்டும் இவரின் செய்திகளை ஏற்கக்கூடாது.

6 . இஸ்ராயீலீ.. அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

இஸ்ராயீலீ அறிவிப்புகளை அறிவிப்பது தவறல்ல என்று சரியான ஹதீஸ்கள் உள்ளன என்பதால் இது விமர்சனம் அல்ல என்று தஹபீ அவர்கள் கூறியுள்ளார். (குர்ஆனுக்கும், சரியான ஹதீஸ்களுக்கும் மாற்றமாக உள்ள அறிவிப்புகளை ஏற்கக்கூடாது)

7 . ஒரு ஹதீஸை பல ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஆசிரியர்களின் வார்த்தைகளை பிரித்து அறிவிக்காமல் ஒரே மாதிரி வாக்கிய அமைப்பில் அறிவிப்பார்.

இந்த விமர்சனம் குறிப்பிட்ட அந்த செய்திகளில் மட்டுமே செல்லுபடியாகும்.

8 . பொய்யர்.

ஹிஷாம் பின் உர்வா அவர்கள் தான் இவரை பொய்யர் என்று கூறினார். இவரின் கருத்தையே இவருக்கு பின் வந்த யஹ்யா பின் ஸயீத் கூறியுள்ளார்.

ஹிஷாம் பின் உர்வா அவர்கள், முஹம்மது பின் இஸ்ஹாகை பொய்யர் என்று கூறியதற்கு காரணம், எனது மனைவி ஃபாத்திமா பின்த் முன்திரிடமிருந்து ஹதீஸைக் கேட்டதாக முஹம்மது பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் என் மனைவியை பார்க்கவில்லை; எனவே இவர் பொய்யர் என்று கூறியுள்ளார்.

(ஆனால் இந்தக் கருத்தை தன் மனைவி கூறியதாக ஹிஷாம் கூறவில்லை. எனவே இதை வைத்து இவரை பொய்யர் எனக் கூறமுடியாது)

1 . எத்தனையோ அறிஞர்கள், பெண்களை பார்க்காமலே திரைக்குப் பின்னிருந்து அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை கேட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இவர் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

2 . ஹிஷாம், ஃபாத்திமா அவர்களை திருமணம் முடிப்பதற்கு முன்பு ஹதீஸ்களை கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

3 . ஃபாத்திமா அவர்கள், இவருக்கு பால்குடி உறவின் அடிப்படையில் தாயின் சகோதரியாகவோ, அல்லது மாமியாகவோ இருந்து அவரிடம் ஹதீஸை கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

4 . மேலும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் முஹம்மது பின் இஸ்ஹாக், ஃபாத்திமா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

எனவே தான் ஹிஷாம் இவரை பொய்யர் என்று கூறியது சரியானதல்ல என்று தஹபீ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மாலிக் இமாம் அவர்களும் இவரை பொய்யர் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு காரணத்தைக் கூறவில்லை என்பதால் இதை ஏற்கமுடியாது.

(நூல்கள்: தாரீகு பஃக்தாத்-2/7, தாரீகுல் இஸ்லாம்-4/193, ஸியரு அஃலாமின் நுபலா-7/33, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825)

அபான் பின் ஸாலிஹ் (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.