ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. (அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா?
நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்…
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29858)حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كُنْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَقَدْتُهُ فَاتَّبَعْتُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، فَقَالَ: «يَا ابْنَةَ أَبِي بَكْرٍ أَحَسِبْتِ أَنَّ اللَّهَ يَحِيفُ عَلَيْكِ وَرَسُولُهُ، إِنَّ اللَّهَ يَنْزِلُ فِي هَذِهِ اللَّيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ فِيهَا مِنَ الذُّنُوبِ أَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ مَعْزِ كَلْبٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-29858.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29858.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29273.
- திர்மிதி இமாம் அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீகஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
கூறியதை சுட்டிக்காட்டி, இது பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.
பார்க்க : திர்மிதீ-739 .
சமீப விமர்சனங்கள்