தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-30360

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் தோன்றினால் என்ன கூறவேண்டும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள்! (அதனால் ஷைத்தான் வெருண்டோடி விடுவான்).

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30360)

114- الغِيلان إذا رئِيت ما يقول الرّجل.

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ جَابِرِ بْنِ عبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ :

إذَا تَغَوَّلَتْ لكُمُ الْغِيلانُ فَنَادُوا بِالأَذَانِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30360.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29159.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين الحسن البصري وجابر بن عبد الله الأنصاري ، وفي الإسناد الحسن البصري متهم بالتدليس ، وباقي رجاله ثقات

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1 / 388 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9252 .

2 . மேலும் பார்க்க: அஹ்மத்-14277 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.