அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.
அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 32674)حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ ثنا الْحَسَنُ بْنُ حَكِيمٍ، عَنْ أُمِّهِ، عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ،
أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ , فَيَقُولُ لِأَهْلِهِ: مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَاقْبَلُوهُ , وَمَا كَانَ سِوَى ذَلِكَ فَرُدُّوهُ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-32674.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூபக்ர் பின் அபூஷைபா
2 . வகீஉ பின் ஜர்ராஹ்
3 . ஹஸன் பின் ஹகீம்
4 . ஹஸனின் தாயார்-அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்.
5 . அபூபர்ஸா (ரலி)
மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24372.
சமீப விமர்சனங்கள்