அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.
அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் உண்ணுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 24372)حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْحَسَنِ بْنِ حَكِيمٍ، عَنْ أُمِّهِ، عَنْ أَبِي بَرْزَةَ،
أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ، وَالْمِهْرَجَانِ، فَكَانَ يَقُولُ لِأَهْلِهِ: «مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-24372.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-23773.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூபக்ர் பின் அபூஷைபா
2 . வகீஉ பின் ஜர்ராஹ்
3 . ஹஸன் பின் ஹகீம்
4 . ஹஸனின் தாயார்-அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்.
5 . அபூபர்ஸா (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூபர்ஸா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் அடிமைப் பெண் பற்றிய விரிவான விவரம் அறியப்படவில்லை.
التاريخ الكبير للبخاري (2/ 291 ت المعلمي اليماني):
2508 – الْحَسَن بْن حكيم أَبُو حكيم وأمه مولاة لأَبِي برزة، قَالَ ابْن المبارك: هو الثقفي قَالَ لنا علي عَنْ وكيع عَنِ الْحَسَن عَنْ أمه: كَانَ أَبُو برزة يأمر أهلَهُ أن يفطروا على ما تيسر ; حديثه عَنِ الْبَصْرِيّين.
الجرح والتعديل – ابن أبي حاتم (3/ 6):
22 – الحسن بن حكيم بن طهمان أبو حكيم روى عن أمه مولاة أبي برزة روى عنه ابن المبارك ووكيع وأبو الوليد سمعت أبي يقول ذلك.
حدثنا عبد الرحمن قال ذكره أبي عن اسحاق بن منصور عن يحيى بن معين قال: الحسن بن حكيم أبو حكيم ثقة.
حدثنا عبد الرحمن قال سألت أبي عن [أبي] حكيم العبدي قال: هو البارقى روى عنه السدى وهو ثقة.
الثقات لابن حبان (6/ 163):
الْحسن بن حَكِيم الثَّقَفِيّ كنيته أَبُو حَكِيم وَأمه مولاة أبي بَرزَة الْأَسْلَمِيّ يروي عَن أَبِيه عَن أَبِي بَرزَة رَوَى عَنْهُ وَكِيع بن الْجراح
ஹஸன் பின் ஹகீம் அவர்களை பலமானவர் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் கூறியுள்ளனர்.
இவரின் தாயார், அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப் பெண் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தரம் பற்றி கூறவில்லை.
(நூல்கள்: தாரீகுல் கபீர்-2508, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/6, அஸ்ஸிகாத்-6/163)
இது போன்ற காலகட்டத்தைச் சேர்ந்தவர்களை சிலர் பொதுவாக ஹஸன் தரம் என்றும் முடிவு செய்வார்கள். (அதாவது மஜ்ஹூலுல் ஐன்-அறவே அறியப்படாதவராகவோ; அல்லது மஜ்ஹூலுல் ஹால்-அறிஞர்களின் சான்றிதலோ விமர்சனமோ இல்லாத-தர நிலை அறியப்படாதவராகவோ இருந்தாலும் சரி)
வேறு சிலர், இது போன்றவர்களிடமிருந்து பலமான ஒருவரோ அல்லது இருவரோ அறிவித்தால் (மற்றவர்கள் இவரை மஜ்ஹூலுல் ஹால்-தர நிலை அறியப்படாதவர் என்று கூறினாலும்) இவர் பலமானவர் ஆவார் என்று முடிவு செய்கின்றனர்.
விரிவான தகவல் பார்க்க: அறியப்படாதவர்.
இந்தக் கருத்தில் அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24372, 32674,
ஆய்வுக்காக: هل ينفع التابعي الكبير (المجهول) كونه مولى للصحابي؟ .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-18865,
சமீப விமர்சனங்கள்