முஹம்மத் பின் ஸிரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம் நைரூஸ் (எனும் பாரசீகப் புத்தாண்டு தினத்தின்) பரிசுகள் கொண்டுவரப்பட்டன. அதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “இது நைரூஸ் தினம்” என்று பதிலளித்தனர். அதைக் கேட்ட அலீ (ரலி) அவர்கள், “அப்படியானால் ஒவ்வொரு நாளும் நைரூஸாக இருக்கட்டும்” என்று கூறினார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நைரூஸ் என்று சொல்வதை அலீ (ரலி) அவர்கள் வெறுத்ததால் தான் இவ்வாறு கூறினார்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
ஒரு குறிப்பிட்ட நாளை (நைரூஸ் என்று) சிறப்பித்தலுக்கு இஸ்லாம் அனுமதிக்காததால், அதைக் குறிப்பிடுவதில் அலீ (ரலி) அவர்கள் வெறுப்புத் தெரிவித்தார்கள் என்று தெரிகிறது.
(பைஹகீ-குப்ரா: 18865)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ثنا أَبُو أُسَامَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ:
أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ: مَا هَذِهِ؟ قَالُوا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرُوزِ , قَالَ: فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ.
قَالَ أَبُو أُسَامَةَ: كَرِهَ أَنْ يَقُولَ نَيْرُوزَ.
قَالَ الشَّيْخُ: وَفِي هَذَا كَالْكَرَاهَةِ لِتَخْصِيصِ يَوْمٍ بِذَلِكَ لَمْ يَجْعَلْهُ الشَّرْعُ مَخْصُوصًا بِهِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-18865.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17353.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39461-முஹம்மத் பின் ஸீரீன் அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸ்களைக் கேட்டதாக தகவல் இல்லை.
எனவே இது முன்கதிஃ ஆகும்.
2 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-18865,
மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18861.
சமீப விமர்சனங்கள்