பாடம்:
(இஸ்லாமிய ஆட்சியில் வாழும்) பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வதும், அவர்களின் பண்டிகைகளில் அவர்களைப் போன்று நடப்பதும் வெறுப்புக்குரியவையாகும்.
அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 18861)بَابُ كَرَاهِيَةِ الدُّخُولِ عَلَى أَهْلِ الذِّمَّةِ فِي كَنَائِسِهِمْ وَالتَّشَبُّهِ بِهِمْ يَوْمَ نَيْرُوزِهِمْ وَمِهْرَجَانِهِمْ
أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ، أنبأ أَبُو بَكْرٍ الْقَطَّانُ، ثنا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، ثنا سُفْيَانُ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ:
لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ وَلَا تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ , فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-18861.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17349.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28486-அதாஉ பின் தீனார் அல்ஹுதலீ அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்டதில்லை. பல செய்திகளில் இவருக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவரோ இருவரோ கூறப்பட்டுள்ளனர்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் அதாஉ பின் யஸார் என்று அபுஷ்ஷைக் அஸ்பஹானீ அவர்களின் நூலில் வந்துள்ளது. இதனடிப்படையில் இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம், இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
ஆகியோர் தங்களின் சில நூல்களில் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்று கூறியுள்ளனர்.
ஆனால், அதாஉ பின் யஸார் என்று வந்திருப்பது தவறாகும்.
1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்—> உமர் (ரலி)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-அல்முஆஃபீ-192.
الزهد للمعافى بن عمران الموصلي (ص: 288)
192 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ عُمَرُ: «لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ؛ فَإِنَّ الرَّجُلَ إِذَا تَعَلَّمَهَا خَبَّ، وَلَا تَلْبَسُوا لِبَاسَهُمْ، وَاخْشَوْشِنُوا، وَاخْلَوْلِقُوا، تَجَرَّدُوا، وَتَمَعَّدُوا، فَإِنَّكُمْ مُعَذَّبُونَ»
…
- ஸவ்ர் பின் யஸீத் —> அதாஉ பின் தீனார் —> உமர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1609 , குப்ரா பைஹகீ-18861 ,
- ஸவ்ர் பின் யஸீத் —> அதாஉ பின் தீனார் (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26281 ,
- அபூஸயீத் பின் ஸலமா —> உமர் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-18862 , ஷுஅபுல் ஈமான்-8940 ,
2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-18865 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-18864 ,
சமீப விமர்சனங்கள்