தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-18864

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 18864)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ثنا أَبُو أُسَامَةَ، ثنا عَوْفٌ، عَنْ أَبِي الْمُغِيرَةِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرو، قَالَ:

مَنْ بَنَى فِي بِلَادِ الْأَعَاجِمِ فَصَنَعَ نَوْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ

وَهَكَذَا رَوَاهُ يَحْيَى بْنُ سَعِيدٍ , وَابْنُ أبي عَدِيٍّ , وَغُنْدَرٌ , وَعَبْدُ الْوَهَّابِ , عَنْ عَوْفٍ , عَنْ أَبِي الْمُغِيرَةِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو مِنْ قَوْلِهِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-18864.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17352.




  • இதன் அறிவிப்பாளர்தொடர் வரும் ராவீ-12281-ஹஸன் பின் அலீ என்பவர் பற்றி இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் பலமானவர் என்று மஸ்லமா பின் காஸிம், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்காஷிஃப்-2/273, தஹ்தீபுத் தஹ்தீப்-1/406, தக்ரீபுத் தஹ்தீப்-1/240)

எனவே இது நபித்தோழரின் சொல் என்பதுடன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்குனா வல்அஸ்மா-தூலாபீ-1843 , குப்ரா பைஹகீ-18863 , 18864 ,


  • அல்குனா வல்அஸ்மா-தூலாபீ-1843.

الكنى والأسماء للدولابي (3/ 1048)
1843 – حَدَّثَنَا أَبِي وَالْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ عَنْ أَبِي الْمُغِيرَةِ الْقَوَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «مَنْ بَنَى فِي بِلَادِ الْأَعَاجِمِ فَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ، وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ، حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ»


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4031 , குப்ரா பைஹகீ-18861 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.