ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34166)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ ذَرٍّ، قَالَ عَبْدُ اللَّهِ
{وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23] قَالَ: جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34166.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33476.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6806-அஸ்பாத் பின் நஸ்ர் என்பவர் பற்றி இவர் நம்பகமானவர்; என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். அபூநுஐம் அவர்கள் இவர் ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை மாற்றி அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/109, தக்ரீபுத் தஹ்தீப்-1/124)
மேலும் பார்க்க: முஸ்லிம்-5464 .
சமீப விமர்சனங்கள்