அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உஹுத் போரின்போது நான் உங்களைக் கண்டேன். (ஆனால், எதிர்த்துத் தாக்காமல்) உங்களை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆனால், நான் உன்னைக் கண்டிருந்தால் உன்னை விட்டு முகத்தை திருப்பியிருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 36795)حَدَّثَنَا أَبُو أُسَامَةَ , قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ أَيُّوبَ , قَالَ:
قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ لِأَبِي بَكْرٍ: ” رَأَيْتُكَ يَوْمَ أُحُدٍ فَصَدَفْتُ عَنْكَ , قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: «لَكِنِّي لَوْ رَأَيْتُكَ مَا صَدَفْتُ عَنْكَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-36795.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் அய்யூப் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- அய்யூப் —> அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-36795, ஹாகிம்-6005,
- அய்யூப் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி)
பார்க்க: அல்முஜாலஸது வ ஜவாஹிருல் இல்ம்-1076,
المجالسة وجواهر العلم (3/ 468):
1076 – حَدَّثَنَا أَحْمَدُ، نَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْمَرْوَزِيُّ، نَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، نَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رضي الله عنهما كَانَ يَوْمَ بَدْرٍ مَعَ الْمُشْرِكِينَ، فَلَمَّا أَسْلَمَ؛ قَالَ لِأَبِيهِ: لَقَدْ أَهْدَفْتَ لِي يَوْمَ بَدْرٍ فَصَرَفْتُ عَنْكَ وَلَمْ أَقْتُلْكَ. فَقَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه: لَكِنَّكَ لَوْ أَهْدَفْتَ لِي لَمْ أَنْصَرِفْ عَنْكَ.
இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போர் நடந்த நாளில் அபூபக்ர்-அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களின் மகனார் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் இருந்தார். அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் ஒருநாள் தன் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “பத்ருப் போரின்போது நீங்கள் என் கண்முன்னால் வந்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லாமல் உங்களை விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டேன்” என்று கூறினார்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீ என் கண்முன்னால் வந்திருந்தால், நான் உன்னை விட்டுத் திரும்பியிருக்கவே மாட்டேன் (உன்னைக் கொன்றிருப்பேன்)” என்று பதிலளித்தார்கள்.
சமீப விமர்சனங்கள்