ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபி (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37553)
وَكِيعٌ عَنْ شَرِيكٍ، عَنْ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مِنَ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قَبْلًا فَيُقَالُ: ابْنُ لَيْلَتَيْنِ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37553.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-36851.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அஷ்ஷஅபி அவர்கள் தாபிஈ ஆவார். நபித்தோழர் அல்ல என்பதால் இது முர்ஸல் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இதில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றல் சரியில்லாதவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 .
சமீப விமர்சனங்கள்