தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1036

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கீழ்க்காணும் பிரார்த்தனையைக் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று கற்றுத்தருவார்கள். “நீங்கள் “அல்லா ஹும்ம இன்னா நஊது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம, வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்” (இறைவா, உன்னிடம் நாங்கள் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றோம். சவக்குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன். (பெருங்குழப்பவாதி) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) என்று பிரார்த்தியுங்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.

முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்:

தாவூஸ் (ரஹ்) அவர்கள் தம் புதல்வரிடம், “உனது தொழுகையில் நீ இவ்வாறு பிரார்த்தித்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவருடைய புதல்வர் “இல்லை” என்றார். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள் “தொழுகையை மீண்டும் தொழுவாயாக!” என்று கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது. ஏனெனில், இதை தாவூஸ் (ரஹ்) அவர்கள் மூன்று அல்லது நான்கு அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

Book : 5

(முஸ்லிம்: 1036)

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ قُولُوا: «اللهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ: ” بَلَغَنِي أَنَّ طَاوُسًا قَالَ لِابْنِهِ: أَدَعَوْتَ بِهَا فِي صَلَاتِكَ؟ فَقَالَ: لَا، قَالَ: أَعِدْ صَلَاتَكَ، لِأَنَّ طَاوُسًا رَوَاهُ عَنْ ثَلَاثَةٍ أَوْ أَرْبَعَةٍ، أَوْ كَمَا قَالَ


Tamil-1036
Shamila-590
JawamiulKalim-935




இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-573 , முஸ்லிம்-1036 , …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.