தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1079

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

1079. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!” என்று கூறினார்கள்.

இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் (இருட்டு இருக்கும்போதே சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் இருட்டு இருக்கும்போதே (சுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன்னார்கள். வைகறை உதயமாகும் போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுதார்கள்.

பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கும்போதே அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெளிச்சம் வந்த பின் சுப்ஹுத் தொழுதார்கள்.

பிறகு லுஹ்ர் தொழுகைக்கு (வெப்பம் தணிந்த பின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெப்பம் தணிந்த பின் தொழுதார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது பொன்னிறம் ஏற்படுவதற்கு முன்பே அஸ்ர் தொழுதார்கள். பிறகு அவர்களிடம் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

பிறகு இரவின் “ஒரு பகுதி” அல்லது “மூன்றில் ஒரு பகுதி” (அறிவிப்பாளர் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்) கடந்த பின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், “கேள்வி கேட்டவர் எங்கே? நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 5


وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ، فَقَالَ: «اشْهَدْ مَعَنَا الصَّلَاةَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ بِغَلَسٍ، فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ حِينَ زَالَتِ الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ، ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَجَبَتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ حِينَ وَقَعَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ الْغَدَ فَنَوَّرَ بِالصُّبْحِ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ، ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ لَمْ تُخَالِطْهَا صُفْرَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ قَبْلَ أَنَّ يَقَعَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ عِنْدَ ذَهَابِ ثُلُثِ اللَّيْلِ، أَوْ بَعْضِهِ – شَكَّ حَرَمِيٌّ -» فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «أَيْنَ السَّائِلُ؟ مَا بَيْنَ مَا رَأَيْتَ وَقْتٌ»


Muslim-Tamil-1079.
Muslim-TamilMisc-970.
Muslim-Shamila-613.
Muslim-Alamiah-970.
Muslim-JawamiulKalim-976.

இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அர்அரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹரமீ பின் உமாரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷுஅபா

شعبة بن الحجاج

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

தரம்: மிகப் பலமானவர், நினைவாற்றல் மிக்கவர், துல்லியமானவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

வம்சம்: அல்அஸ்தீ, மவ்லா

புனைப்பெயர்: அபூபஸ்தாம்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: வாஸித், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 82, வாஸித்

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான, நினைவாற்றல் மிக்க, துல்லியமான, வணக்கசாலியான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் ஹிஜ்ரி 82ல் வாஸித் நகரில் பிறந்தார். பஸரா நகரில் வசித்து, ஹிஜ்ரி 160ல் அங்கேயே மரணமடைந்தார்.

ஈராக்கில் ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து, பலவீனமானவர்களை ஒதுக்கிய முதல் அறிஞர் இவரே. ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ இவரை 'ஹதீஸ் கலையின் அமீருல் முஃமினீன்' என்று புகழ்ந்துள்ளார். இமாம் ஷாஃபிஈ அவர்கள் 'ஷுஅபா இல்லையென்றால் ஈராக்கில் ஹதீஸ் அறியப்பட்டிருக்காது' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): கதாதா, அய்யூப் அஸ்ஸக்தியானீ, இஸ்மாயீல் பின் அபூ காலித், அனஸ் பின் ஸீரீன், ஸாபித் பின் அஸ்லம் அல்பனானீ, ஹகம் பின் உதைபா, ஹம்மாத் பின் அபூ சுலைமான், காலித் அல்ஹத்தா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, சுலைமான் அல்அஃமஷ், மாலிக் இமாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், ஸஃத் பின் இப்ராஹீம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, வகீஉ பின் அல்ஜர்ராஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், யஸீத் பின் ஸரீஉ, இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (இப்னு அலிய்யா), ஹம்மாத் பின் உஸாமா

வேறு பெயர்கள்: ஷுஅபா, ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ், ஷுஅபா அல்க்தகீ


ஆதாரம்: muslimscholars.info (20020) · Should verify

அல்கமா பின் மர்ஸத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுலைமான் பின் புரைதா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

புரைதா (ரலி)

புரைதா-அல்அஸ்லமீ (ரலி) – Burayda bin al-Husayb

இறப்பு: ஹிஜ்ரி 63, மர்வ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஆமிர்

தந்தை பெயர்: அல்ஹுஸைப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்

வம்சம்: அஸ்லம் கோத்திரம்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அபூ ஸஹ்ல், அபூ ஸாஸான், அபூ அல்ஹுஸைப்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, மக்கா, பஸரா, சிஜிஸ்தான், மர்வ்

இறப்பு: ஹிஜ்ரி 63, மர்வ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

புரைதா பின் அல்ஹுஸைப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் பத்ர் போருக்கு முன்பே இஸ்லாத்தைத் தழுவினார், ஆனால் அதில் பங்கேற்கவில்லை. இவர் மதீனாவில் வசித்து, பின்னர் பஸரா மற்றும் மர்வ் நகரங்களுக்குச் சென்றார்.

இவர் ஹிஜ்ரி 63 இல் மர்வ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் புரைதா, அப்துல்லாஹ் பின் புரைதா, அப்துல்லாஹ் பின் அவ்ஸ், ஆமிர் அஷ்ஷஅபீ, அபூ அல்மலீஹ் பின் உஸாமா, அபூ நத்ரா அல்அப்தீ, அப்துல்லாஹ் பின் மவ்லா

வேறு பெயர்கள்: ஆமிர், புரைதா அல்ஹஸீப்


ஆதாரம்: muslimscholars.info (3131) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.