தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-131

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவன் வித்துக்களைப் பிளந்தானோ, உயிர்களைப் படைத்தானோ அவன்மீது ஆணையாக! உம்மீ நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) என்னிடம் அறுதியிட்டுக் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் என்னை (அலீயை) நேசிக்கமாட்டார்கள். நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் என்னை வெறுக்கமாட்டார்கள்.

இதை ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 1

(முஸ்லிம்: 131)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَاللَّفْظُ لَهُ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرٍّ، قَالَ:

قَالَ عَلِيٌّ: وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ، وَبَرَأَ النَّسَمَةَ، إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ: «أَنْ لَا يُحِبَّنِي إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضَنِي إِلَّا مُنَافِقٌ»


Muslim-Tamil-131.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-78.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-116.




இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . இப்னு அபூஷைபா

3 . வகீஃ , அபூமுஆவியா

4 . அஃமஷ்

5 . அதீ பின் ஸாபித்

6 . ஸிர்ரு பின் ஹுபைஷ்

7 . அலீ (ரலி)


1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . யஹ்யா பின் யஹ்யா

3 . அபூமுஆவியா

4 . அஃமஷ்

5 . அதீ பின் ஸாபித்

6 . ஸிர்ரு பின் ஹுபைஷ்

7 . அலீ (ரலி)


இந்தச் செய்தி பலவீனம் என்பதற்கு சிலர் கூறும் காரணங்கள்:

1 . அஃமஷ் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இவர் தனது ஆசிரியர் அதீ பின் ஸாபித் என்பவரிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை. மேலும் இவர் மட்டுமே அதீ பின் ஸாபிதிடமிருந்து தனித்து அறிவித்துள்ளார். வேறு சிலர் இவரிடமிருந்து அறிவித்ததாக வந்திருந்தாலும் அவை பலவீனமானவையாகும்.

2 . மேலும் அதீ பின் ஸாபித் என்பவர் ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையில் முற்றிப்போனவர். ராஃபிளா கொள்கையுடைவர். இதில் பிடிவாதம் கொண்டவர். மேலும் இந்த பித்அத்திற்கு மற்றவர்களை அழைப்பவர்.

இது போன்றவர்கள், அவர்களின் பித்அத் கொள்கை சார்ந்த செய்திகளை அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
போன்ற சில ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

3 . கருத்தின் அடிப்படையில் இது சரியில்லை என்பதால் இது முன்கராகும். சிலர் அலீ அவர்களை நேசிக்கின்றனர். ஆனால் அவர்களிடம் சரியான ஈமானே இல்லை. சிலர் அலீ அவர்களை வெறுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு ஈமான் இல்லை என்றும் கூறமுடியாது.

பொதுவாக நபித்தோழர்கள் அனைவரையும் நாம் நேசிக்கவேண்டும். இந்தக் கருத்தை அன்ஸாரி நபித்தோழர்களை நேசிப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி-173783)


இந்தச் செய்தியை வேறு சிலர் சரியானது என்றும், இந்தச் செய்தியின் கருத்தில் தவறு இல்லை என்றும் 5 வகையான விளக்கங்களை கூறியுள்ளனர்.

  • 1 . அஃமஷ் அவர்கள், தனது ஆசிரியரான அதீ பின் ஸாபிதிடம் நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-58)

  • 2 . அன்ஸாரி நபித்தோழர்களை நேசிப்பது பற்றி இதே அதீ பின் ஸாபித் அவர்களும் அறிவித்துள்ளார்.

(பார்க்க: புகாரி-3783)

பொதுவாக ஷீயாக்கள் சில குறிப்பிட்ட நபித்தோழர்களைத் தவிர மற்றவர்களை வெறுக்கக்கூடியவர்கள் தான். ஆனால் அதீ பின் ஸாபித் இந்தச் செய்தியையும் அறிவித்துள்ளார் என்பதாலும், அவர் பலமானவர், உண்மையாளர் என்பதாலும் அவரின் செய்தியை சந்தேகப்படத் தேவையில்லை.

பித்அத்வாதிகள் இரு வகையாக உள்ளனர்.

1 . தங்கள் பித்அத் கொள்கைக்காக புதிதாக ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்கள்.

2 . உண்மைச் செய்திகளை தங்களின் சில கொள்கைக்கு ஆதாரமாக காட்டக்கூடியவர்கள்.

இந்தக் கருத்து அதீ பின் ஸாபித் இடம்பெறாத வேறு சிலர் வழியாகவும் வந்துள்ளது என்பதால் இந்த செய்தி உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது…(ஆய்வில்)


மேலும் பித்அத்வாதிகளின் செய்திகளை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்பதில் மூன்று கருத்து உள்ளது.

1 . சிலர் அவர்களின் எந்தச் செய்தியையும் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர். (இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அபூஇஸ்ஹாக் அல்ஜவ்ஸஜானீ. இவர்கள் பித்அத் கொள்கையுடையோரை பலவீனமானவர்கள் என்று கூறிவிடுவர்.)

2 . சிலர், இவர்கள் தனது பித்அத் குறித்த செய்திகளை அறிவித்தால் ஏற்கக்கூடாது. அதல்லாத மற்ற செய்திகளை அறிவித்தால் ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.

3 . பித்அத்வாதிகளில் ஒருவர் பலமானவர்; உண்மையாளர் என்றால் அவரின் அனைத்து செய்திகளையும் ஏற்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். ஆரம்பகால அறிஞர்களான யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோரின் கருத்தும் இதுதான். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
திர்மிதீ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற அறிஞர்களும் இந்தக் கருத்தின்படியே முடிவு செய்கின்றனர்.

இந்த மூன்று கருத்துக்களில் 3 வது கருத்தே சரியானது என்று அப்துல்லாஹ் ஸஃத் என்ற ஹதீஸ்துறை அறிஞர் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஷரஹுல் மூகிளா-அபுல்முன்திர்-15-18)


  • 3 . நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் பல வகையில் தங்கள் நயவஞ்சகத்தை வெளிப்படுத்தினர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

(உ.ம்) ஏழை நபித்தோழர்கள் தர்மம் செய்யும் போது அதையும் விமர்சிப்பார்கள். வசதியுடைய நபித்தோழர்கள் தர்மம் செய்யும் போது அதையும் விமர்சிப்பார்கள்.

இவ்வாறே ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களை பற்றிய அவதூறுக்கும் அவர்களே காரணமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் விசயத்தில் என்ன முடிவு செய்வது என்பது பற்றி ஆலோசனை கேட்கும் போது அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடினால் உங்களுக்கு வேறு மனைவியை ஏற்படுத்துவான் என்று கூறினார்கள். இந்த நிகழ்வையும் நயவஞ்சகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். பொதுவாக நயவஞ்சகர்களுக்கு நபி (ஸல்) அவர்களை பிடிக்காது. அவர்களுக்கு உதவியாக இருக்கக் கூடிய முக்கிய நபித்தோழர்களையும் பிடிக்காது. அலீ (ரலி) அவர்கள் விசயத்திலும் நயவஞ்சகர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று தெரிகிறது.

அலீ அவர்களை வெறுக்ககூடியவர்களை வைத்து நாங்கள் நயவஞ்சகர்களை அறிந்துக் கொள்வோம் என்று இதனடிப்படையில் தான் சில நபித்தோழர்கள் கூறியுள்ளனர்.

  • 4 . அலீ அவர்களை வெறுக்கக் கூடியவர்கள் இரு வகையினராக உள்ளனர்.

சில தனிப்பட்ட காரணத்திற்காக அலீ அவர்களின் மீது கோபம் கொண்டவர்கள்.

நபியையும், நபித்தோழர்களையும் பிடிக்காத காரணத்தால் அலீ அவர்களையும் வெறுத்தவர்கள்.

முதல் வகையினரை ஈமான் இல்லாதவர்கள் என்றும், நயவஞ்சகர்கள் என்றும் கூறமுடியாது. இரண்டாவது வகையினர் தான் நயவஞ்சகர்கள் ஆவார்கள்.


  • 5 . அலீ (ரலி) அவர்களின் சிறப்பு பற்றி ஏராளமான பொய்யான செய்திகள் இருந்தாலும் சில குறிப்பிட்ட செய்திகளே சரியானவை. சரியான செய்திகளில் மேற்கூறப்பட்ட செய்தியையும் சில ஹதீஸ்துறை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

منتقى الألفاظ بتقريب علوم الحديث للحفاظ (ص445):
634 – فضائل علي، كلها ضعيفة، إلا حديث: “أنت مني بمنزلة هارون من موسى“، وحديث: “أنت مني وأنا منك“. وحديث: “لأعطين الراية غدًا رجلًا يفتح على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله“. وحديث: “لا يحبك إلا مؤمن ولا يبغضك إلا منافق“: وحديث: “ومن كنت مولاه فعلي مولاه” (1)، وحديث “قم أبا تراب

(நூல்: முன்தகல் அல்ஃபாள்-634, 1/445)


  • இந்தச் செய்தியின் பல அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், அஃமஷ் அவர்களிடமிருந்து அஃமஷ் —> அதீ பின் ஸாபித் —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிப்போர்களின் செய்தியே சரியானது-உண்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (3/ 203)
363- وَسُئِلَ عَنْ حَدِيثِ زِرٍّ، عَنْ عَلِيٍّ قَالَ لَا يُحِبُّنِي إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُنِي إِلَّا مُنَافِقٌ إِنَّهُ لَعَهِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ زِرٍّ، عَنْ عَلِيٍّ رَوَاهُ أَصْحَابُ الْأَعْمَشِ عَنْهُ كَذَلِكَ
وَاخْتُلِفَ عَنْ وَكِيعٍ فَرَوَاهُ السَّرِيُّ بْنُ حَيَّانَ عَنْ وَكِيعٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ عَنْ عَلِيٍّ.
وَوَهِمَ فِيهِ وَالصَّحِيحُ عَنْ وَكِيعٍ وَغَيْرِهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ زِرٍّ
وَرَوَاهُ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ الْجَبَلِيُّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَلِيٍّ.
وَوَهِمَ فِيهِ أَيْضًا وَالصَّوَابُ حَدِيثُ عَدِيِّ بْنِ ثَابِتٍ.

(நூல்: அல்இலலுல் வாரிதா-363)


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அதீ பின் ஸாபித் —> அலீ (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-58 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-131 , இப்னு மாஜா-114 , திர்மிதீ-3736 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-5018 , 5022 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-,

  • அபுல்ஜாரூத் (ஸியாத் பின் முன்திர்) —> அல்ஹாரிஸ் ஹம்தானீ  —> அலீ (ரலி) 

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-445 ,


  • முஸ்னத் ஹுமைதீ-58.

مسند الحميدي (1/ 182)
58 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، ثنا يَحْيَى بْنُ عِيسَى، ثنا الْأَعْمَشُ، ثنا عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ «لَقَدْ عَهِدَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأُمِّيُّ أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُكَ إِلَّا مُنَافِقٌ»


2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஃபளாஇலுஸ் ஸஹாபா-அஹ்மத்-1086.

فضائل الصحابة لأحمد بن حنبل (2/ 639)
1086 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قثنا عَلِيُّ بْنُ مُسْلِمٍ قثنا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ السُّلَمِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: مَا كُنَّا نَعْرِفُ مُنَافِقِينَا مَعْشَرَ الْأَنْصَارِ إِلَّا بِبُغْضِهِمْ عَلِيًّا.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவாசிகளான) அன்ஸாரி கூட்டத்தாரில் அலீ (ரலி) அவர்களை வெறுப்பவர்களை நயவஞ்சகர்கள் என்று நாங்கள் அறிந்துக் கொள்வோம்.


3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஜுஸ்வுல் ஹிம்யரீ-38.

جزء علي بن محمد الحميري (ص: 97)
38 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ، قَالَ: «مَا كُنَّا نَعْرِفُ الْمُنَافِقِينَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِبُغْضِ عَلِيٍّ»

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் அவர்களின் காலத்தில், அலீ (ரலி) அவர்களை வெறுப்பவர்களை, நயவஞ்சகர்கள் என்று நாங்கள் அறிந்துக் கொள்வோம்.

  • இந்தக் கருத்து வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பலவீனமானவையாகும்.

யஸீத் பின் குஸைஃபா —> புஸ்ர் பின் ஸயீத் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வேறு ஒரு செய்தியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ளார்.

(பார்க்க: புகாரி-6245)

என்றாலும், யஸீத் பின் குஸைஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹ்ரீ அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இவர் இந்த ஒரு செய்தியை மட்டுமே யஸீத் பின் குஸைஃபா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.

ஸுஹ்ரீ அவர்கள் தத்லீஸ் செய்பவரா? இல்லையா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.

1 . ஸுஹ்ரீ அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்று ஷாஃபிஈ இமாம், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் கூறியதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும் தத்லீஸ் செய்வோர்களை 5 வகையினராக குறிப்பிட்டுள்ள இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், ஸுஹ்ரீ அவர்களை 3 வது வகையினரில் கூறியுள்ளார். இந்த வகையினர் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தால் தான் ஏற்கப்படும்.

2 . வேறு சிலர் ஸுஹ்ரீ அவர்கள் மதீனாவாசி ஆவார். மதீனாவாசிகளிடம் தத்லீஸ் இருக்கவில்லை. ஷாஃபிஈ இமாம் அவர்கள் ஸுஹ்ரீ சில செய்திகளை முர்ஸலாக அறிவித்திருப்பதால்-அதாவது நபித்தோழரை விட்டு அறிவித்திருப்பதால் தான் இவ்வாறு கூறியுள்ளார். எனவே ஸுஹ்ரீ அவர்களின் அன்அனா செய்திகளை ஏற்கலாம். மேலும் அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கும் சிலர் தான் இதுபோன்று சில செய்திகளை அன்அனாவாக அறிவித்துள்ளனர். இது குறை இல்லை என்றும் கூறுகின்றனர்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களே, ஸுஹ்ரீ அவர்களின் பல அன்அனா செய்திகளை ஆதாரமாக ஏற்றுள்ளார். அவை சரியானது என்று கூறியுள்ளார். எனவே ஸுஹ்ரீ அவர்களை 2 வது வகையினரில் தான் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியிருக்கவேண்டும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

(நூல்கள்: அத்தக்ரீஜ் வ திராஸதுல் அஸானீத்-78, முஃஜமுல் முதல்லிஸீன்-419, அத்தப்யீனு லிஅஸ்மாஇல் முதல்லிஸீன்-64 …)

ஆய்வுக்காக: ஜுஸ்வுல் ஹிம்யரீ-38தத்லீஸுஸ் ஸுஹ்ரீ


4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4751 .


5 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

6 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

7 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3783 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.