தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1768

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)

அத்தியாயம்: 11

(முஸ்லிம்: 1768)

وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ وَاثِلَةَ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا»


Muslim-Tamil-1768.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-972.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1619.




  • இந்தக் கருத்தில் வந்துள்ள சில செய்திகளில் அறிவிப்பாளர் வாஸிலா பின் அஸ்கஃ அவர்களுக்கும், புஸ்ர் பின் உபைதுல்லாஹ் அவர்களுக்குமிடையில் இப்னு முபாரக், பிஷ்ர் பின் பக்ர் போன்ற இருவர் மட்டுமே அபூஇத்ரீஸ் அல்கவ்லானீயை கூறியுள்ளனர். இப்னு ஜாபிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமான அறிவிப்பாளர்கள் அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ என்ற அறிவிப்பாளரை கூறவில்லை. எனவே இப்னு முபாரக், பிஷ்ர் பின் பக்ர் போன்ற இருவரும் தவறு செய்துவிட்டனர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1199)

  • புஸ்ர் பின் உபைதுல்லாஹ் அவர்கள் அதிகமாக அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ —>வாஸிலா பின் அஸ்கஃ  என்ற அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே இந்த செய்தியும் அப்படி இருக்கலாம் என இப்னு முபாரக் அவர்கள் தவறாக எண்ணிவிட்டார். ஆனால் இந்த செய்தியை புஸ்ர் பின் உபைதுல்லாஹ் அவர்கள், வாஸிலா பின் அஸ்கஃ அவர்களிடம் நேரடியாக கேட்டுள்ளார் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1029)

1 . இந்தக் கருத்தில் அபூமர்ஸத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17215 , 17216 , முஸ்லிம்-1768 , 1769 , அபூதாவூத்-3229 , திர்மிதீ-1050 , நஸாயீ-760 , …

2 . அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1767 .

3 . அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2045 .

4 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1567 .

5. ஜாபிர்

6 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12051 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24009-38 , முஸ்லிம்-1765 ,

ஹதீஸ்கலை குறிப்பு பார்க்க: அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித் .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.