அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
Book : 12
(முஸ்லிம்: 1844)وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟
Tamil-1844
Shamila-1015
JawamiulKalim-1692
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33812-ஃபுளைல் பின் மர்ஸூக் என்பவர் பற்றி ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர், நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர்; இவர் தனித்து அறிவிக்கும்போது அதை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். - உஸ்மான் பின் ஸயீத் தாரமீ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அதிய்யா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார். என்னுடைய பார்வையில் இது அதிய்யாவின் தவறாக இருக்கலாம். என்றாலும் இவரைப் போன்று மற்ற பலமானவர்கள் அறிவித்திருந்தால் ஏற்கலாம். இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார். - ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல. முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரின் செய்திகளை பதிவு செய்திருப்பதை குறை கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். (என்றாலும் இவர் இடம்பெறும் செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் நிபந்தனையின்படி சரியானது என்று தனது ஹாகிமில் கூறியுள்ளார்). - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ, அபூபக்ர் பின் அபூகைஸமா ஆகியோர் கூறியுள்ளனர். இவ்வாறே உஸ்மான் பின் ஸயீத் தாரமீ அவர்களும் கூறியுள்ளார். என்றாலும் இத்துடன் இவர் பலவீனமானவர் என்று கூறப்படுகிறது என்றே குறிப்பிட்டுள்ளார். (எனவே உஸ்மான் அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறவில்லை என்று தெரிகிறது.) இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுஹைர் கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் மாணவர்களில் அப்பாஸ் அத்தூரீ அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். - இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இவர் சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/75, அஸ்ஸிகாத்-7/316, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/128, தாரீகுல் இஸ்லாம்-4/478, ஸியரு-7/342, தஹ்தீபுத் தஹ்தீப்-3/401, தக்ரீபுத் தஹ்தீப்-1/786)
- இந்த செய்தியை சிலர் சரியானது என்று கூறியிருந்தாலும் சிலர் இதை ஹஸன் தரம் என்றும், இந்தக் கருத்து தவறானதல்ல என்றும் கூறுகின்றனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8839 , அஹ்மத்-8348 , தாரிமீ-2759 , முஸ்லிம்-1844 , திர்மிதீ-2989 , முஸ்னத் பஸ்ஸார்-9742 , குப்ரா பைஹகீ-6394 , ஷுஅபுல் ஈமான்-1118 , 5353 , 5354 , அல்ஆதாப் லில்பைஹகீ-390 ,
2 . உம்முஅப்துல்லாஹ் பின்த் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-428 .
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-10.
சமீப விமர்சனங்கள்