தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3181

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்து கொள்வேன்: சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

(ஹுதைஃபா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நாங்கள் செவியுற்றோம்” என்று கூறினர்.

Book : 22

(முஸ்லிம்: 3181)

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ سَعْدِ بْنِ طَارِقٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ

أُتِيَ اللهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللهُ مَالًا، فَقَالَ لَهُ: مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا؟ قَالَ: وَلَا يَكْتُمُونَ اللهَ حَدِيثًا، قَالَ: يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ، فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ، وَكَانَ مِنْ خُلُقِي الْجَوَازُ، فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ، وَأُنْظِرُ الْمُعْسِرَ، فَقَالَ اللهُ: أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ، تَجَاوَزُوا عَنْ عَبْدِي “،

فَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ، وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ، هَكَذَا سَمِعْنَاهُ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-Tamil-3181.
Muslim-TamilMisc-2920.
Muslim-Shamila-1560.
Muslim-Alamiah-2920.
Muslim-JawamiulKalim-2928.




  • இதன் அறிவிப்பாளர்தொடர்களை குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இந்த செய்தியை அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்ஜயீ (ஸஃத் பின் தாரிக்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூகாலித் அல்அஹ்மர் அவர்கள் இந்த செய்தி உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இது தவறாகும். உக்பா பின் அம்ர் என்ற (அபூமஸ்வூத்-ரலி) வழியாக வந்துள்ளதையே உக்பா பின் ஆமிர் (ரலி) , அபூமஸ்வூத் (ரலி) என்று இருவர் அறிவிப்பதாக தவறாக விளங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1053, 6/180)

3 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3181 , ஹாகிம்-3197 ,

மேலும் பார்க்க: புகாரி-2077 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.