தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2077

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

(கடனைத் தீர்க்க) வசதி படைத்தவர்களுக்கும் அவகாசம் அளித்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் ‘நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!’ என்று கூறினார். உடனே, ‘அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!’ என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!’

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

மற்றோர் அறிவிப்பில், ‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், ‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.

இன்னொரு அறிவிப்பில், ‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 34

(புகாரி: 2077)

بَابُ مَنْ أَنْظَرَ مُوسِرًا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، أَنَّ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، حَدَّثَهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

تَلَقَّتِ المَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، قَالُوا: أَعَمِلْتَ مِنَ الخَيْرِ شَيْئًا؟ قَالَ: كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا وَيَتَجَاوَزُوا عَنِ المُوسِرِ، قَالَ: قَالَ: فَتَجَاوَزُوا عَنْهُ “،

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ أَبُو مَالِكٍ، عَنْ رِبْعِيٍّ: «كُنْتُ أُيَسِّرُ عَلَى المُوسِرِ، وَأُنْظِرُ المُعْسِرَ»، وَتَابَعَهُ شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ،

وَقَالَ أَبُو عَوَانَةَ: عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ: «أُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»،

وَقَالَ نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيٍّ: «فَأَقْبَلُ مِنَ المُوسِرِ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»


Bukhari-Tamil-2077.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2077.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியை ரிப்இய்யு பின் ஹிராஷ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் மன்ஸூர் அவர்களின் அறிவிப்பு நபியின் கூற்றாகவும், ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. இவர் வழியாக வரும் செய்திகளில் ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாக வந்திருக்கும் செய்திகளே சரியாக இருக்க வாய்ப்புள்ளது. என்றாலும் இந்த செய்தி (மற்ற பலமான அறிவிப்பாளர்தொடரில்) நபியின் கூற்றாகவும் வந்துள்ளது என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1135)

  • இதன் அறிவிப்பாளர்தொடர்களை குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இந்த செய்தியை அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்ஜயீ (ஸஃத் பின் தாரிக்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூகாலித் அல்அஹ்மர் அவர்கள் இந்த செய்தி உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இது தவறாகும். உக்பா பின் அம்ர் என்ற (அபூமஸ்வூத்-ரலி) வழியாக வந்துள்ளதையே உக்பா பின் ஆமிர் (ரலி) , அபூமஸ்வூத் (ரலி) என்று இருவர் அறிவிப்பதாக தவறாக விளங்கிவிட்டார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1053, 6/180)

1 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி), 2 . அபூமஸ்வூத் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • ரிப்இய்யு பின் ஹிராஷ் —> ஹுதைஃபா (ரலி), அபூமஸ்வூத் (உக்பா பின் அம்ர்-ரலி)

பார்க்க: அஹ்மத்-1706423384 , 23463 , …, தாரிமீ-2588 , புகாரி-2077 , 2391 , 3450 , 3451 , முஸ்லிம்- , இப்னு மாஜா-2420

..அஹ்மத்-23353 , புகாரி- 7130 ,

(இந்த அறிவிப்பாளர்தொடரில் தஜ்ஜால் பற்றி வந்துள்ள செய்திகள்:

பார்க்க: புகாரி-3450)

  • ரிப்இய்யு பின் ஹிராஷ் —> அபூமஸ்வூத் (உக்பா பின் அம்ர்-ரலி) —> ஹுதைஃபா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22175 , 23019 ,

  • அஃமஷ் —> அபூவாயில் (ஷகீக்) —> அபூமஸ்வூத் (உக்பா பின் அம்ர்-ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22172 , 22173 , அஹ்மத்-17083 , முஸ்லிம்-3182 , திர்மிதீ-1307 , இப்னு ஹிப்பான்-5047 , அல்முஃஜமுல் கபீர்-537 , ஹாகிம்-2226 , 2227 , குப்ரா பைஹகீ-10972

3 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3181 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-2078 .

இந்த செய்தி சரியானது என்பதால் இந்தக் கருத்தில் உள்ள மற்ற ஹதீஸ்கள், கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3481 , அஹ்மத்-23046 , முஸ்லிம்-3184 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.