தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3450

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50

பனூ இஸ்ராயீல்-இஸ்ராயீலின் சந்ததிகள் பற்றிய குறிப்பு.

 ரிப்யீ இப்னு ஹிராஷ் (ரஹ்) அறிவித்தார்

உக்பா இப்னு ஆமிர்(ரலி), ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா(ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும்.

மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book : 60

(புகாரி: 3450)

بَابُ مَا ذُكِرَ عَنْ بَنِي إِسْرَائِيلَ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ: قَالَ عُقْبَةُ بْنُ عَمْرٍو، لِحُذَيْفَةَ: أَلاَ تُحَدِّثُنَا مَا سَمِعْتَ  مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ

«إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا، فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ فَمَاءٌ بَارِدٌ، وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ فَنَارٌ تُحْرِقُ، فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ، فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ»


Bukhari-Tamil-3450.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3450.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி), அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37472 , 37473 , 37505 , அஹ்மத்-, புகாரி-3450 , 7130 , முஸ்லிம்-5624562556265627 , அபூதாவூத்-4315 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-6799 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,

(ரிப்இய்யு பின் ஹிராஷ் —> ஹுதைஃபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் கடனைத் தள்ளுபடி செய்யும் மனிதரைப் பற்றி வந்துள்ள செய்திகள்:

பார்க்க: புகாரி-2077)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.