அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள்.
அத்தியாயம்: 22
(முஸ்லிம்: 3194)حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ
سَأَلْتُ جَابِرًا، عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ؟ قَالَ: «زَجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»
Muslim-Tamil-3194.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1569.
Muslim-Alamiah-2933.
Muslim-JawamiulKalim-2941.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . ஸலமா பின் ஷபீப்
3 . ஹஸன் பின் அஃயன்-(ஹஸன் பின் முஹம்மத் பின் அஃயன்)
4 . மஃகில் பின் உபைதுல்லாஹ்
5 . அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம்
6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இந்தச் செய்தியின் கருத்தில் அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.
அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து, மஃகில் பின் உபைதுல்லாஹ் அறிவிக்கும் செய்தியைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இது இப்னு லஹீஆ வின் செய்தியாகும் என்று கூறியுள்ளார். (அதாவது இப்னு லஹீஆ அவர்கள், அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து அறிவிப்பதைத் தான் (இப்னு லஹீஆவை விட்டுவிட்டு) மஃகில் அறிவித்துள்ளார் என்ற கருத்தில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். இதனால் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் விமர்சனத்தின்படி சில அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
வேறுசில அறிஞர்கள் இந்த விமர்சனத்தை ஏற்பதில்லை.
மஃகில் அவர்களின் அறிவிப்பைப் பற்றி, இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் குறிப்பிடும்போது மஃகில் அவர்களிடமிருந்து ஹஸன் பின் முஹம்மத் பின் அஃயன் அறிவிக்கும் மஃகில் அபுஸ்ஸுபைர் ஜாபிர் என்ற அறிவிப்பாளர்தொடர் உறுதியானது சரியானது. மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும்போது தான் மறுக்கப்படும் என்று கூறியுள்ளார்…
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், இவர் அறிவிக்கும் 17 செய்திகளை பதிவு செய்துள்ளார். இவற்றில் சிலவற்றில் இவரின் செய்தியை தனி ஆதாரமாகவும், சிலவற்றில் துணை ஆதாரமாகவும் கூறியுள்ளார்.
இப்னு லஹீஆ வைப் போன்று 7 செய்திகளை அறிவித்துள்ளார். இப்னு லஹீஆவும் மற்றவர்களும் அறிவித்துள்ளதைப் போன்று 7 செய்திகளை அறிவித்துள்ளார்.
மேலும் இவர் அறிவிக்கும் செய்திகள், அஃமஷ் அபூஸுஃப்யான் ஜாபிர் என்ற தொடரில் வரும் செய்திகளும் உள்ளன.
மேலும் இவரின் செய்திகளில் சிலவை இப்னு ஜுரைஜ், ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஹிஷாம் அத்தஸ்துவாஈ, ஹம்மாத் பின் ஸலமா, மூஸா பின் உக்பா போன்ற பலமானவர்களின் செய்திகளுக்கு நிகராகவும் உள்ளது.
இவ்வாறே அபூஸுஃப்யான், …
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உமர் பின் ஸைத் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, இப்னு மாஜா-3250 , அபூதாவூத்-3480 , 3807 , திர்மிதீ-1280 , தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஹஸன் பின் அபூஜஃபர் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் அபீ யஃலா-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,
- அதாஉ பின் அபூரபாஹ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, / அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-,
- இப்னு லஹீஆ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-2161 , ஷரஹ் மஆனில் ஆஸார்-,
- மஃகில் பின் உபைதுல்லாஹ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-3194 , இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
- ஹம்மாத் பின் ஸலமா —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-4295 , 4668 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,
அஃமஷ் அவர்களின் அறிவிப்புகள்:
- அஃமஷ் —> அபூஸுஃப்யான் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-3479 , திர்மிதீ-1279 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2237 ,
சமீப விமர்சனங்கள்