தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3997

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தலைமுடியையோ நகங்களையோ களைவதற்கு வந்துள்ள தடை.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.

இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!” என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்” என்றார்கள்.

Book : 35

(முஸ்லிம்: 3997)

7 – بَابُ نَهْيِ مَنْ دَخَلَ عَلَيْهِ عَشْرُ ذِي الْحِجَّةِ وَهُوَ مُرِيدُ التَّضْحِيَةِ أَنْ يَأْخُذَ مِنْ شَعْرِهِ، أَوْ أَظْفَارِهِ شَيْئًا

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا»، قِيلَ لِسُفْيَانَ: فَإِنَّ بَعْضَهُمْ لَا يَرْفَعُهُ، قَالَ: «لَكِنِّي أَرْفَعُهُ»


Muslim-Tamil-3997.
Muslim-TamilMisc-3655.
Muslim-Shamila-1977.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3660.




  • இந்த செய்தியை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், மவ்கூஃப் ஆக வந்திருப்பதே உண்மை என்று கூறினாலும் மற்ற அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருக்கும் அறிவிப்பாளர்தொடர்கள் சரியானவையே என்று கூறுகின்றனர்.

இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26474 , 26571 , 26654 , 26655 , தாரிமீ-1990 , 1991 , முஸ்லிம்-3997 , 3998 , 3999 , 4000 , இப்னு மாஜா-3149 , 3150 , அபூதாவூத்-2791 , திர்மிதீ-1523 , நஸாயீ-4361 , 4362 , 4363 , 4364 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.