அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு (மீண்டும்) அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே,எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு தொழுகைக்காக “இகாமத்” சொல்லப்பட்டது. தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய முறையில் அங்கத்தூய்மை (உளூ) செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம் (செய்தேன்);அல்லாஹ்வின் தூதரே!” என்றார். “பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழவில்லையா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அந்த மனிதர் “ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் “உமக்குரிய தண்டனையை” அல்லது “உமது பாவத்தை” மன்னித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 49
(முஸ்லிம்: 5338)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا شَدَّادٌ، حَدَّثَنَا أَبُو أُمَامَةَ، قَالَ
بَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، وَنَحْنُ قُعُودٌ مَعَهُ، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَسَكَتَ عَنْهُ، وَأُقِيمَتِ الصَّلَاةُ، فَلَمَّا انْصَرَفَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَبُو أُمَامَةَ: فَاتَّبَعَ الرَّجُلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ انْصَرَفَ، وَاتَّبَعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْظُرُ مَا يَرُدُّ عَلَى الرَّجُلِ، فَلَحِقَ الرَّجُلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، قَالَ أَبُو أُمَامَةَ: فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ حِينَ خَرَجْتَ مِنْ بَيْتِكَ، أَلَيْسَ قَدْ تَوَضَّأْتَ فَأَحْسَنْتَ الْوُضُوءَ؟» قَالَ: بَلَى، يَا رَسُولَ اللهِ قَالَ: «ثُمَّ شَهِدْتَ الصَّلَاةَ مَعَنَا» فَقَالَ: نَعَمْ، يَا رَسُولَ اللهِ قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِنَّ اللهَ قَدْ غَفَرَ لَكَ حَدَّكَ – أَوْ قَالَ: ذَنْبَكَ
Muslim-Tamil-5338.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2765.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4971.
முஸ்லிம்-5338 இல் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தி விசயத்தில் இப்னுல் கய்யிம் என்ற அறிஞர் கூறிய விளக்கம்:
[الجامع الصحيح للسنن والمسانيد 37/ 254 بترقيم الشاملة آليا:]
قال ابن القيم في إعلام الموقعين ج2ص60: فَهَذَا لَمَّا جَاءَ تَائِبًا بِنَفْسِهِ مِنْ غَيْرِ أَنْ يَطْلُبَ غَفَرَ اللهُ لَهُ ، وَلَمْ يُقِمْ عَلَيْهِ الْحَدَّ الَّذِي اعْتَرَفَ بِهِ ، وَهُوَ أَحَدُ الْقَوْلَيْنِ فِي الْمَسْأَلَةِ ، وَهُوَ إحْدَى الرِّوَايَتَيْنِ عَنْ أَحْمَدَ ، وَهُوَ الصَّوَابُ. فَإِنْ قِيلَ: فَمَاعِزٌ جَاءَ تَائِبًا ، وَالْغَامِدِيَّةُ جَاءَتْ تَائِبَةً ، وَأَقَامَ عَلَيْهِمَا الْحَدَّ. قِيلَ: لَا رَيْبَ أَنَّهُمَا جَاآ تَائِبَيْنِ ، وَلَا رَيْبَ أَنَّ الْحَدَّ أُقِيمَ عَلَيْهِمَا ، وَبِهِمَا احْتَجَّ أَصْحَابُ الْقَوْلِ الْآخَرِ ، وَسَأَلْتُ شَيْخَنَا عَنْ ذَلِكَ ، فَأَجَابَ بِمَا مَضْمُونُهُ: بِأَنَّ الْحَدَّ مُطَهِّرٌ ، وَأَنَّ التَّوْبَةَ مُطَهِّرَةٌ ، وَهُمَا اخْتَارَا التَّطْهِيرَ بِالْحَدِّ عَلَى التَّطْهِيرِ بِمُجَرَّدِ التَّوْبَةِ ، وَأَبَيَا إلَّا أَنْ يُطَهَّرَا بِالْحَدِّ ، فَأَجَابَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم إلَى ذَلِكَ ، وَأَرْشَدَ إلَى اخْتِيَارِ التَّطْهِيرِ بِالتَّوْبَةِ عَلَى التَّطْهِيرِ بِالْحَدِّ ، فَقَالَ فِي حَقِّ مَاعِزٍ: ” هَلَّا تَرَكْتُمُوهُ يَتُوبُ ، فَيَتُوبَ اللهُ عَلَيْهِ ” ، وَلَوْ تَعَيَّنَ الْحَدُّ بَعْدَ التَّوْبَةِ لَمَا جَازَ تَرْكُهُ ، بَلْ الْإِمَامُ مُخَيَّرٌ بَيْنَ أَنْ يَتْرُكَهُ كَمَا قَالَ لِصَاحِبِ الْحَدِّ الَّذِي اعْتَرَفَ بِهِ: ” اذْهَبْ فَقَدْ غَفَرَ اللهُ لَكَ ” ، وَبَيْنَ أَنْ يُقِيمَ ، كَمَا أَقَامَهُ عَلَى مَاعِزٍ وَالْغَامِدِيَّةِ لَمَّا اخْتَارَا إقَامَتَهُ وَأَبَيَا إلَّا التَّطْهِيرَ بِهِ ، وَلِذَلِكَ رَدَّهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِرَارًا ، وَهُمَا يَأبَيَانِ إلَّا إقَامَتَهُ عَلَيْهِمَا ، وَهَذَا الْمَسْلَكُ مَسْلَكٌ وَسَطٌ بَيْنَ مَنْ يَقُولُ: لَا تَجُوزُ إقَامَتُهُ بَعْدَ التَّوْبَةِ أَلْبَتَّةَ ، وَبَيْنَ مَسْلَكِ مَنْ يَقُولُ: لَا أَثَرَ لِلتَّوْبَةِ فِي إسْقَاطِهِ أَلْبَتَّةَ ، وَإِذَا تَأَمَّلْتَ السُّنَّةَ ، رَأَيْتَهَا لَا تَدُلُّ إلَّا عَلَى هَذَا الْقَوْلِ الْوَسَطِ ، وَاللهُ أَعْلَمُ. أ. هـ
அவர் யாராலும் பிடிபடாத நிலையில், அவராகவே முன்வந்து தவ்பா செய்து நின்றபோது அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அதற்குரிய தண்டனையை நபி (ஸல்) அவர்கள் அவர் மீது நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அறிஞர்களிடையே நிலவும் இரண்டு கருத்துகளில் இதுவும் ஒன்றாகும். மேலும், இது இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
(ரஹ்) அவர்களின் இரு அறிவிப்புகளில் ஒரு கருத்தாகும்; இதுவே சரியானதும் கூட.
யாராவது, ‘மாஇஸ் என்பவரும் மனம் வருந்தித் தானே வந்தார்; ஃகாமிதிய்யா குலத்துப் பெண்ணும் மனம் வருந்தித் தானே வந்தார்; அப்படியிருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவர் மீதும் தண்டனையை நிறைவேற்றினார்களே?’ என்று கேட்டால்,
அதற்கான பதில்: அவர்கள் இருவரும் நிச்சயமாக மனம் வருந்தித்தான் வந்தார்கள், அவர்கள் மீது தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்துடைய அறிஞர்கள் இந்த இரு நிகழ்வுகளையே தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இது குறித்து நான் என்னுடைய ஆசிரியரிடம் (இப்னு தைமிய்யா அவர்களிடம்) கேட்டபோது, அவர் அளித்த விளக்கத்தின் சுருக்கம் இதுதான்: ‘குற்றத்திற்கான தண்டனையும் மனிதனைத் தூய்மைப்படுத்தக்கூடியது; உண்மையான பாவமன்னிப்பும் (தவ்பாவும்) மனிதனைத் தூய்மைப்படுத்தக்கூடியது. ஆனால், அவ்விருவரும் வெறும் தவ்பாவின் மூலம் தூய்மையடைவதை விட, தண்டனையின் மூலமாகவே தூய்மையடைய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். தண்டனை மூலமே தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
அதே நேரத்தில், தண்டனையை விட பாவமன்னிப்பின் மூலம் தூய்மையடைவதையே நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். அதனால்தான் மாஇஸ் என்பவரைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் மனம் வருந்தி, அல்லாஹ் அவருடைய மனவருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்காக நீங்கள் அவரை விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ஒரு மனிதன் பாவமன்னிப்பு கேட்டப் பிறகும் தண்டனை நிறைவேற்றப்படுவது கட்டாயக் கடமையாக இருந்திருந்தால், அதைத் தவிர்ப்பது நபி அவர்களுக்கு அனுமதியாக இருந்திருக்காது.
எனவே, இதில் ஆட்சியாளருக்கு (இமாமிற்கு) இரு அதிகாரங்கள் உள்ளன. குற்றத்தை ஒப்புக்கொண்டவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ போ, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான்’ என்று கூறித் தண்டிப்பதைத் தவிர்த்தது போலத் தவிர்க்கலாம். அல்லது மாஇஸ் மற்றும் ஃகாமிதிய்யா பெண்ணின் விஷயத்தில் செய்தது போலத் தண்டனையை நிறைவேற்றலாம். ஏனெனில், அவ்விருவரும் தண்டனை மூலமே தூய்மையடைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்கள் பலமுறை அவர்களைத் திருப்பி அனுப்பியும், அவர்கள் தண்டனையைப் பெறுவதிலேயே உறுதியாக நின்றார்கள்.
இந்த வழிமுறையானது, ‘மனம் வருந்திய பிறகு தண்டனை நிறைவேற்றவே கூடாது’ என்று கூறும் ஒரு சாராரோடும், ‘தண்டனையைத் தவிர்ப்பதில் பாவமன்னிப்பிற்கு எந்தத் தாக்கமும் இல்லை’ என்று கூறும் மறுசாராரோடும் இணையாமல், இரு தரப்பிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழிமுறையாகும். நீங்கள் நபிகளாரின் வழிமுறையை (ஸுன்னாவை) உற்றுக்கவனித்தால், அது இந்த நடுநிலையான போக்கையே குறிப்பிடுவதை காண்பீர்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
…
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-5338, அபூதாவூத்-4381, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, அல்முஃஜமுல் கபீர்-,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-6823.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-27240,
சமீப விமர்சனங்கள்