பாடம் : 3
விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார். மேலும், “(இரவெல்லாம்) சோர்ந்து விடாது நின்று வணங்கி, (பகலெல்லாம்) விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவரும் ஆவார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன் என அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 53
(முஸ்லிம்: 5703)2 – بَابُ الْإِحْسَانِ إِلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ وَالْيَتِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ – وَأَحْسِبُهُ قَالَ – وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ»
Tamil-5703
Shamila-2982
JawamiulKalim-5299
சமீப விமர்சனங்கள்