தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11379

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அபூஸயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபூஸயீத்

(முஸ்னது அஹ்மத்: 11379)

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ

أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْبِرْ أَبَا سَعِيدٍ فَإِنَّ الْفَقْرَ إِلَى مَنْ يُحِبُّنِي مِنْكُمْ أَسْرَعُ مِنَ السَّيْلِ مِنْ أَعْلَى الْوَادِي، وَمِنْ أَعْلَى الْجَبَلِ إِلَى أَسْفَلِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10952.
Musnad-Ahmad-Shamila-11379.
Musnad-Ahmad-Alamiah-10952.
Musnad-Ahmad-JawamiulKalim-11164.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32148-அம்ர் பின் ஹாரிஸ் அவர்கள், ஸயீத் பின் அபூஸயீத் (ரலி) அவர்களிடம் எதையும் செவியேற்கவில்லை என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இமாம் கூறியுள்ளார்.
  • மேலும் இதில் அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் அபூஸயீத் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்ற கருத்தே உண்மையாகும். சிலர் இவர் இடம்பெறும் சில செய்திகளை பலமான அறிவிப்பாளரான ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அறிவிக்கிறார் என்று தவறாக கருதியுள்ளனர். இவர் அறியப்படாதவர் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

மேலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இந்த செய்தி மற்ற சரியான ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளது என்ற காரணத்தினாலும் பலவீனமானது என்று கூறியுள்ளார். (உதாரணத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஏழ்மையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடியுள்ளார்கள் என்று வந்துள்ள ஹதீஸ்கள்).

2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11379 , ஷுஅபுல் ஈமான்-1399 , 9958 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2350 .

கூடுதல் தகவல் பார்க்க:

إسناده ضعيف لإرساله فيما ذكر البيهقي في “الشعب” (1473) فإن عمرو بن الحارث المصري لم يثبت سماعه من سعيد بن أبي سعيد الخدري، وبقية رجاله ثقات رجال الشيخين غير سعيد بن أبي سعيد، لم يرو عنه غير اثنين، ولم يؤثر توثيقه عن غير ابن حبان.
وأخرجه البيهقي في “الشعب” (1473) من طريق بحر بن نصر، عن عمرو بن الحارث، به. وقال: هذا مرسل.

وفي الباب عن عبد الله بن المغفَّل عند الترمذي (2350) ، والبيهقي في “الشعب” (1471) ، وإسناده ضعيف.
وعن أنس بن مالك عند البزار (3595) ، والبيهقي في “الشعب” (1470) ، وفي إسناده بكر بن سُليم الصواف، وقد تفرد به، وفيه كلام.
وعن أبي ذر عند الحاكم 4/331، وفي إسناده عبد الله بن أبي طلحة من رجال مسلم، ولكن لم يثبت سماعه من أبي ذر، ومع ذلك صححه الحاكم على شرط الشيخين، ووافقه الذهبي!
وعن ابن عباس عند البيهقي في “السنن” 6/119، وفي إسناده الحسين بن قيس الرحبي، ولقبه حنش، وهو متروك.
قال البيهقي في “الشعب” 2/175: فإن صح شيء من هذه الأحاديث، فإنما هو زهادته صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ في الدنيا واختياره الآخرة على الأولى لعلمه بمعايب الدنيا فلم
يرضها لنفسه ولا لمن يحبه من أمته، أعاذنا الله من فتنة الدنيا وعذاب الآخرة برحمته.
وقال السندي: قوله: “فإن الفقر … “؛ لأن المحبة لا تتم إلا بالمجانسة.

قلنا: ويناقض هذه الأحاديث الضعيفة أحاديث صحيحة ثابتة عن الرسول صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وفيها الاستعاذة من الفقر وقرنه مع الكفر، ومحبة الله سبحانه وتعالى للغني التقي، وامتداح المال المكتسب من طرق مشروعة، وامتداح فاعل ذلك إذا كان رجلاً صالحاً ينفق منه على نفسه وعياله وعلى الفقراء والمحتاجين، وأن اليد العليا وهي المنفقة خير من اليد السفلى وهي الآخذة، وعد من يكتسب المال من حلِّه ويتقي فيه ربه ويصل رحمه، ويعلم أن فيه لله حقاً عده بأفضل المنازل. انظر حديث عائشة في البخاري (6377) ، ومسلم (589) ، وحديث عمرو بن العاص عند أحمد 4/197 و202، وحديث عبد الله بن عمر عند البخاري (7529) ، ومسلم (815) ، وحديث أبي كبشة الأنماري عند الترمذي (2326) ، وحديث أنس بن مالك عند ابن حبان (1023) ، وحديث أبي هريرة عند ابن حبان أيضاً (1030) ، وحديث سعد بن أبي وقاص عند مسلم (2965) ، وحديث أبي بكرة عنده أيضاً (1028) ، وحديث أبي ذر عنده أيضاً (1006) .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.