தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2350

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஏழ்மையின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்!” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு மூன்று முறை நடந்தது.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (உண்மையிலேயே) என்னை நேசிப்பீர்களானால் வறுமையை எதிர்கொள்ள தக்க முன்னேற்பாட்டுடன் தயாராகிக் கொள்ளுங்கள்!. ஏனெனில், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளத்தைக் காட்டிலும் என்னை நேசிப்பவரை நோக்கி வறுமை விரைவாக வந்துசேரும்” என்று கூறினார்கள்.

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்த செய்தியில் இடம்பெறும் அபுல்வாஸிஉ அர்ராஸிபீ என்பவரின் இயற்பெயர் ஜாபிர் பின் அம்ர் என்பதாகும். இவர் (இராக்கிலுள்ள) பஸரா நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

(திர்மிதி: 2350)

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الفَقْرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ نَبْهَانَ بْنِ صَفْوَانَ الثَّقَفِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ أَسْلَمَ قَالَ: حَدَّثَنَا شَدَّادٌ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ، عَنْ أَبِي الوَازِعِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ:

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ. فَقَالَ لَهُ: «انْظُرْ مَاذَا تَقُولُ»، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا، فَإِنَّ الفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ»

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شَدَّادٍ أَبِي طَلْحَةَ، نَحْوَهُ بِمَعْنَاهُ،

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَأَبُو الوَازِعِ الرَّاسِبِيُّ اسْمُهُ: جَابِرُ بْنُ عَمْرٍو وَهُوَ بَصْرِيٌّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2350.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2285.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளை (அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற) சிலர் சரியானது என்று கூறியிருந்தாலும் கருத்து சரியில்லை என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர். காரணம் இந்த செய்தி மற்ற சரியான ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளது என்று கூறியுள்ளார். (உதாரணத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஏழ்மையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடியுள்ளார்கள் என்று வந்துள்ள ஹதீஸ்கள்.

(பார்க்க: அஹ்மத்-11379)

மேலும் நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசித்தவர்களாக இருந்தும் செல்வந்தர்களாக இருந்துள்ளார்கள். எனவே உண்மை நிகழ்வுக்கு மாற்றமாக இருக்கிறது என்பதின்படியும் இது பலவீனமான செய்தியாகும்.

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2350 , இப்னு ஹிப்பான்-2922 , ஷுஅபுல் ஈமான்-1398 ,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11379 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6222 .

4 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7944 .

5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-11649 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.