ஹி-126 சுமார் ...வயது.
இயற்பெயர்: அப்துல்லாஹ் (அல்லது) அப்துர்ரஹ்மான்
தந்தை பெயர்: ஸம்ஹ்
பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: தர்ராஜ், அபுஸ்ஸம்ஹ்,
ஊர் பெயர்: எகிப்து, டமாஸ்கஸ்-திமிஷ்க்.
பிறப்பு: ஹிஜ்ரீ- ...
இறப்பு: ஹிஜ்ரீ-126 அல்லது 182
கால கட்டம்: 5.
தர்ராஜ் பின் ஸம்ஆன்-அபுஸ்ஸம்ஹ்-அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி
1 . சிலர் (பொதுவாக) இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
2 . வேறுசிலர் இவர் பலமானவர் என்றக் கருத்தை மறுத்து, இவர் ஸதூக்-நடுத்தரமானவர் என்று கூறியுள்ளனர்.
3 . வேறுசிலர் இவர் சிறிது பலவீனமானவர் என்றும்,
4 . வேறு சிலர் பலவீனமானவர் என்றும்,
5 . வேறுசிலர் முன்கருல் ஹதீஸ் என்றும்; விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
6 . வேறுசிலர் இவர் அபுல்ஹைஸம் ---> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
7 . வேறுசிலர் இவர் அறிவிக்கும் 5 ஹதீஸ்களில் தான் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
8 . வேறுசிலர் இவர் அறிவிக்கும் செய்திகளைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம். இவர் புதியக் கருத்தை தரும் செய்திகளை தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
5039 - سَمِعت يحيى يَقُول وَسُئِلَ عَن حَدِيث دراج عَن أبي الْهَيْثَم عَن أَي سعيد فَقَالَ مَا كَانَ هَكَذَا الْإِسْنَاد فَلَيْسَ بِهِ بَأْس فَقلت لَهُ إِن دَرَّاجًا يحدث عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد عَن النَّبِي صلى الله عليه وسلم قَالَ أصدق الرُّؤْيَا بالأسحار ويروى أَيْضا اذْكروا الله حَتَّى يَقُولُوا مَجْنُون فَقَالَ هما ثقتان دراج وَأَبُو الْهَيْثَم قَالَ يحيى وَقد روى هَذِه الْأَحَادِيث عمر بن الْحَارِث قلت ليحيى دراج من هُوَ قَالَ مصري وَهُوَ أَبُو السَّمْح قلت ليحيى أَبُو الْهَيْثَم من هُوَ قَالَ مصري واسْمه سُلَيْمَان بن عَمْرو
1 . இப்னுமயீன்,
இப்னு ஹிப்பான், ஹாகிம், இப்னு கல்ஃபூன், இப்னு ஷாஹீன், அபுல்காஸிம் போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
2 . உஸ்மான் பின் ஸயீத், இப்னு யூனுஸ் போன்றோர் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)
3 . அபூஹாதிம் அவர்கள், இவரின் ஹதீஸ்களில் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
4 . இப்னு மயீன் அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளதாக ஃபள்லக் அர்ராஸீ அவர்களிடம் கூறப்பட்டபோது, இவர் பலமானவர் அல்ல என்றும்; எந்த சிறப்பும் அல்ல என்றும் கூறினார்.
ஸாஜீ, உகைலீ, அபுல்அரப் போன்றோர் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
5 . அஹ்மத் இமாம் அவர்கள் இவரைப் பற்றி கூறிய தகவலை அவரின் மாணவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர்.
1 . அஹ்மத் இமாமின் மகனார்-அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள், இவரின் செய்திகள் முன்கர் என்று அஹ்மத் இமாம் கூறியதாக அறிவித்துள்ளார்.
حدثنا عبد الرحمن، أنا عبد الله بن أحمد بن حنبل فيما كتب إلي، قال: سمعت أبي يقول: دراج حديثه منكر
2 . அஹ்மத் பின் அபூயஹ்யா அவர்கள், இவர் அபுல்ஹைஸம் ---> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் பலவீனம் உள்ளது என்று அஹ்மத் இமாம் கூறியதாக அறிவித்துள்ளார்.
3 . அபூதாவூத் இமாம் அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார். இந்தக் கருத்தையே இப்னு ஹஜர், அல்பானீ, ஷுஐப் அல்அர்னாவூத் போன்றவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
அஹ்மத் இமாம் இவரைப் பற்றி முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாகவும் அபூதாவூத் இமாம் அறிவித்துள்ளார்.
[259] سَمِعت أَحْمد سُئِلَ عَن دراج أبي السَّمْح قَالَ هَذَا روى مَنَاكِير كَثِيرَة وَفِي حَدِيث فِي إِسْنَاده دراج الشَّأْن فِي دراج
6 . நஸாயீ, தாரகுத்னீ போன்றோர் இவரின் ஹதீஸ்கள் முன்கர் என்று கூறியுள்ளனர்.
سمعتُ ابْن حماد يقول دراج أبو السمح منكر الحديث قاله أحمد بن شُعَيب النسائي.
سؤالات الحاكم للدارقطني - الفاروق (ص: 119)
265 - دَرَّاج، أبو السَّمْح، ضَعِيْفٌ، ألقيتُ عليه حَدِيْث شُعْبَة، عن عَمْرو بن يَحْيَى، قَالَ: الْحَدِيْث الْحَسَن هكذا يكون.
142- وسمعته يقول دراج أبو السمح هو ابن سمعان مصري متروك.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405, ஸுஆலாதுல் ஹாகிம்-265, ஸுஆலாதுல் பர்கானீ-142)
ஒரு அறிவிப்பாளரை அல்லது அவரது செய்தியை முன்கர் என்று கூறுவதில் ஹதீஸ்கலை அறிஞர்கள் வழக்குச்சொல் பலவாறு உள்ளது. அஹ்மத், (நஸாயீ) போன்ற அறிஞர்கள் பலமானவர், நடுத்தரமானவர் போன்ற தரத்தில் உள்ளவர்கள் தனித்து அறிவிக்கும் செய்திகளையும் முன்கர் என்று கூறுவார்கள் என இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.
قلت: المنكر أطلقه أحمد بن حنبل وجماعة على الحديث الفرد الذي لا متابع له...
(நூல்: ஹத்யுஸ் ஸாரீ-1/437)
7 . இப்னு அதீ அவர்கள், இவரின் சில செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு அவற்றில் 5 செய்திகளை முன்கர் என்று கூறியுள்ளார். அதாவது அந்த செய்தியின் கருத்தை அவரது உள்ளம் ஏற்கமுடியவில்லை என்ற அடிப்படையில் முன்கர் என்று கூறியுள்ளார். மேலும் இவைத் தவிர இவர் அறிவிக்கும் மற்ற செய்திகளில் பிரச்சனை இல்லை. இவ்வாறு முடிவு செய்வதே இப்னு மயீன் அவர்களின் கருத்துக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
قال الشيخ: وعامة هذه الأحاديث التي أمليتها
مما لا يتابع دراج عليه
وفيها ما قد روى عن غيره ومن غير هذا الطريق
ولدراج، عنِ ابْن حر وأبي الهيثم، وابن حجيرة غير ما ذكرت من الحديث ويروي عن دراج عَمْرو بْن الحارث، وابن لَهِيعَة وحيوة بْن شريح وغيرهم
ومما ينكر من أحاديثه بعض ما ذكرت، وَهو قوله أصدق الرؤيا بالأسحار والشتاء ربيع المؤمن والسباع حرام وأكثروا من ذكر اللَّه حتى يقال مجنون وقد روى عنه بهذا الإسناد أَيضًا لا حليم إلَاّ ذو عثرة عن عَمْرو عَنْ دَرَّاجٍ، عَن أَبِي الْهَيْثَمِ، عَن أبي سَعِيد يرويه، عنِ ابْن وهب الغرباء
وقد تقدم ذكر من حدثناه، ومَنْ رواه، عنِ ابْن وهب في باب الحاء في ذكر حرملة بْن يَحْيى وسائر أخبار دراج غير ما ذكرت من هذه الأحاديث يتابعه الناس عليها
وأرجو أن أخرجت دراج وبرأته من هذه الأحاديث التي أنكرت عليه إن سائر أحاديثه لا بأس بها ويقرب صورته ما قال فيه يَحْيى بْن مَعِين
(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/15)
(வேறு சில அறிஞர்கள் இவரின் அனைத்து செய்திகளும் முன்கர்-மறுக்கப்படவேண்டியவை என்றும் கூறியுள்ளனர். இதற்கான காரணம் இவர் அறிவித்த செய்திகளின் கருத்தை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இவர் மாறுபட்டும், தனித்தும் அறிவித்துள்ளார். இதனால் தான் இவரை ஆரம்பத்தில் சிலர் குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு பிறகு இவரை பொதுவாக முன்கருல் ஹதீஸ் என்றும், விடப்பட்டவர் என்றும் கருத்துக் கூறியுள்ளனர். இதற்கு தாரகுத்னீ போன்ற அறிஞர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.)
சமீப விமர்சனங்கள்