தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12479

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். எழுபது கூட்டத்தினர் அழிந்தனர். ஒரு கூட்டத்தினர் வெற்றிபெற்றனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். எழுபத்தி ஒரு கூட்டத்தினர் அழிந்து விடுவர். ஒரு கூட்டத்தினர் வெற்றிபெறுவர்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! வெற்றிபெறும் அந்த ஒரு கூட்டத்தினர் யார் எனக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் தான் ஜமாஅத், ஜமாஅத் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 12479)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَهَلَكَتْ سَبْعُونَ فِرْقَةً، وَخَلَصَتْ فِرْقَةٌ وَاحِدَةٌ، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، تَهْلِكُ إِحْدَى وَسَبْعُونَ فِرْقَةً، وَتَخْلُصُ فِرْقَةٌ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَنْ تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «الْجَمَاعَةُ الْجَمَاعَةُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12479.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12242.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين سعيد بن أبي هلال الليثي وأنس بن مالك الأنصاري ، وفيه عبد الله بن لهيعة الحضرمي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பலவீனமானவர்; இவரிடமிருந்து சிலர் அறிவித்தால் அவை சரியானது..
  • மேலும் இதில் அனஸ் (ரலி) அவர்களுக்கும், ஸயீத் பின் அபூஹிலாலுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3993 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.