தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12561

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் (தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில்) மக்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ஆவார்.

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ஆவார்.

எவர் பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 12561)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَيُونُسَ بْنِ عُبَيْدٍ، وَحُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12561.
Musnad-Ahmad-Alamiah-12103.
Musnad-Ahmad-JawamiulKalim-12323.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இந்தச் செய்தியில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் ஸைத், யூனுஸ் பின் உபைத், ஹுமைத் அத்தவீல் ஆகிய 3 பேர் அறிவித்துள்ளனர்.
  • இவர்களில் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)

மற்ற இருவரும் பலமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி சரியானதாகும்.


2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாத் பின் ஸலமா —> அலீ பின் ஸைத், யூனுஸ் பின் உபைத், ஹுமைத் அத்தவீல் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-12561 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,


  • அலீ பின் மஸ்அதா —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-13048 ,


  • யஸீத் பின் அபூஹபீப் —> ஸினான் பின் ஸஃத் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, முஸ்னத் அபீ யஃலா-, ஹாகிம்-,


  • முபாரக் —> அப்துல்அஸீஸ் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,


மேலும் பார்க்க: புகாரி-10 .


(தனிப்பகுதி

2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


3 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:)


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-71 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.