தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12614

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரித் தோழர்களில் ஒரு வீட்டாரிடம் அவர்களுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பார்கள். ஒரு நாள் அந்த ஒட்டகம் அவர்களுக்கு அடங்க மறுத்து அதன் முதுகை அவர்கள் பயன்படுத்த தடை செய்தது. எனவே அன்சாரித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு நாங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்போம். அது எங்களுக்கு அடங்க மறுத்துவிட்டது. மேலும், அதன் முதுகை அதற்குப் பயன்படுத்த எங்களுக்குத் தடை செய்துவிட்டது. இதனால் எங்கள் விவசாயப் பயிர்களும், பேரீத்த மரங்களும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன” என்று குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “எழுங்கள்” என்று கூறினார்கள். எனவே அவர்களும் எழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அந்த ஒட்டகம் ஒருபுறம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி நடந்தார்கள். அப்போது அன்சாரித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயைப் போலாகிவிட்டது. அது உங்களைத் தாக்கக்கூடும் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அதனால் எனக்கு எந்தத் தீங்கும் இல்லை” என்று கூறினார்கள். ஒட்டகம் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், அவர்களை நோக்கி வந்தது. இறுதியில் அவர்களின் முன்னால் சிரம் பணிந்து விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் அதன் தலையின் மயிரைக் (முன் நெற்றி முடியைப்) பிடித்தார்கள். அது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை (மீண்டும்) வேலைக்கு ஈடுபடுத்தினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது அறிவு இல்லாத ஓர் உயிரினம்; உங்களுக்காகச் சிரம் பணிகிறது. நாங்கள் அறிவார்ந்தவர்கள். எனவே, நாங்கள் உங்களுக்காகச் சிரம் பணியவே அதிகம் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் சிரம் பணிவது தகாததாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்று இருந்திருந்தால், தன் கணவனின் உரிமை மிகப் பெரியது என்பதால் ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரம் பணியுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ஒரு கணவனின் பாதத்திலிருந்து அவனது தலை உச்சி வரை சீழும் இரத்தமும் வழியும் புண்கள் இருந்து, ஒரு மனைவி அதை நாக்கால் தடவிச் சுத்தம் செய்தாலும் அவள் தன் கணவனுக்கான உரிமையை நிறைவேற்றியவளாக ஆக மாட்டாள்” என்று குறிப்பிட்டார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 12614)

حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حَفْصٍ، عَنْ عَمِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

كَانَ أَهْلُ بَيْتٍ مِنَ الْأَنْصَارِ لَهُمْ جَمَلٌ يَسْنُونَ عَلَيْهِ، وَإِنَّ الْجَمَلَ اسْتُصْعِبَ عَلَيْهِمْ، فَمَنَعَهُمْ ظَهْرَهُ، وَإِنَّ الْأَنْصَارَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّهُ كَانَ لَنَا جَمَلٌ نَسْنَى عَلَيْهِ، وَإِنَّهُ اسْتُصْعِبَ عَلَيْنَا، وَمَنَعَنَا ظَهْرَهُ، وَقَدْ عَطِشَ الزَّرْعُ وَالنَّخْلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «قُومُوا» فَقَامُوا، فَدَخَلَ الْحَائِطَ وَالْجَمَلُ فِي نَاحِيَتِهِ، فَمَشَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ، فَقَالَتِ الْأَنْصَارُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَدْ صَارَ مِثْلَ الْكَلْبِ الْكَلِبِ، وَإِنَّا نَخَافُ عَلَيْكَ صَوْلَتَهُ، فَقَالَ: «لَيْسَ عَلَيَّ مِنْهُ بَأْسٌ» . فَلَمَّا نَظَرَ الْجَمَلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ نَحْوَهُ، حَتَّى خَرَّ سَاجِدًا بَيْنَ يَدَيْهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَاصِيَتِهِ أَذَلَّ مَا كَانَتْ قَطُّ، حَتَّى أَدْخَلَهُ فِي الْعَمَلِ. فَقَالَ لَهُ أَصْحَابُهُ: يَا نَبِيَّ اللَّهِ، هَذِهِ بَهِيمَةٌ لَا تَعْقِلُ تَسْجُدُ لَكَ وَنَحْنُ نَعْقِلُ، فَنَحْنُ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، فَقَالَ: «لَا يَصْلُحُ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ، وَلَوْ صَلَحَ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، مِنْ عِظَمِ حَقِّهِ عَلَيْهَا،

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ كَانَ مِنْ قَدَمِهِ إِلَى مَفْرِقِ رَأْسِهِ قُرْحَةٌ تَنْبَجِسُ بِالْقَيْحِ وَالصَّدِيدِ، ثُمَّ اسْتَقْبَلَتْهُ تَلْحَسُهُ مَا أَدَّتْ حَقَّهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12614.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12374.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியின் கருத்து சரியல்ல என்பதால் இது பலவீனமானதாகும்…


மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6452.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.