தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1640

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் அவர்கள், (ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களின் வீட்டின் ஒரு பகுதியின் விசயத்தில்) ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும், அர்வா பின்த் உவைஸ் என்ற பெண்ணுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரிசெய்யுங்கள் என்று எங்களை அனுப்பினார். நாங்கள், ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விசாரிக்க வந்த போது, ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் “நான் அந்தப்பெண்ணிற்குரிய பங்கை எடுத்துக்கொண்டேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்:

“யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்; யார் ஒரு கூட்டத்தின் அடிமையிடம் அவர்களின் அனுமதியின்றி வேலை வாங்குகின்றாரோ அவரின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்; யார் பொய் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிக்கின்றாரோ அவரின் செல்வத்தில் அல்லாஹ் பரக்கத் அளிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 1640)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ ، أَنَّ مَرْوَانَ، قَالَ:

اذْهَبُوا فَأَصْلِحُوا بَيْنَ هَذَيْنِ لِسَعِيدِ بْنِ زَيْدٍ وَأَرْوَى، فَقَالَ سَعِيدٌ: أَتُرَوْنِي أَخَذْتُ مِنْ حَقِّهَا شَيْئًا؟ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنِ أخَذَ مِنَ الأَرْضِ شِبْرًا بِغَيْرِ حَقِّهِ، طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ. وَمَنْ تَوَلَّى مَوْلَى قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ. وَمَنِ اقْتَطَعَ مَالَ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينٍ، فَلا بَارَكَ اللَّهُ لَهُ فِيهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1640.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1575.




மேலும் பார்க்க: திர்மிதீ-1421 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.