யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(திர்மிதி: 1421)حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ نَحْوَ هَذَا وَيَعْقُوبُ هُوَ ابْنُ إبرَاهِيمَ بْنِ سَعْدِ بْنِ إبرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِيُّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1341.
Tirmidhi-Shamila-1421.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1337.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2355-அபூஉபைதா பின் முஹம்மது பின் அம்மார் பின் யாஸிர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் (ஒரு சமயம்) இவரின் (அஸல்) பெயர் தெரியவில்லை என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும், (மற்றொரு சமயம்) இவர் ஹதீஸ் சரியானது என்றும், மற்றொரு சமயம் இவரின் பெயர் ஸலமா என்றும் கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவரின் பெயர் அறியப்படவில்லை என்று கூறியுள்ளார். (எனவே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களும் அபூஉபைதா பின் முஹம்மது என்பவரையும், ஸலமா பின் முஹம்மது என்பவரையும் ஒருவராக கருதுகின்றனர்). - என்றாலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஸலமா பின் முஹம்மது பின் அம்மார் பின் யாஸிர் என்பவர் பற்றி கூறும் போது இவர் அபூஉபைதா பின் முஹம்மது அவர்களின் சகோதரர் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார். - அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், அபூஉபைதா பலமானவர்; அவரின் சகோதரர் ஸலமா பின் முஹம்மது நிலைபற்றி அறியப்படவில்லை என்று கூறியுள்ளார். (எனவே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
போன்றோர் அபூஉபைதா பின் முஹம்மது என்பவரையும், ஸலமா பின் முஹம்மது என்பவரையும் வெவ்வேறானவர்கள் என்று கருதுகின்றனர்).
(நூல்: தஹ்தீபுல் கமால்-7498, தஹ்தீபுத் தஹ்தீப்-4/553, அல்ஜர்ஹு வத்தஃதீல்-1944, தாரீகுல் கபீர்-2011)
- மிஸ்ஸீ இமாம் அவர்கள், புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கருத்தைக் குறிப்பிட்டு இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதே சரியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால்-7498) - மேற்கண்ட தகவல்களிலிருந்து அபூஉபைதா பலமானவர் என்று முடிவு செய்யலாம். என்றாலும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரைப் பற்றி உஸ்ஸிக-இவர் பலமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்காஷிஃப்-6731).
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை பற்றி கூறும் அறிஞர்களில் இப்னுஹிப்பானைப் போன்று ஏற்கமுடியாத அறிஞரின் கூற்று இருக்கும் போது தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் இப்படி கூறுவார் என்று பொதுவான ஒரு கருத்து உள்ளது. (மற்றவர்களாலும் பலமானவர்கள் என்று கூறப்பட்ட சிலர் விசயத்தில் கூட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் உஸ்ஸிக என்று கூறியுள்ளார் என்பது தனி விசயம்)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் தனது தஹ்தீபுத் தஹ்தீபுக்கு பிறகு தொகுக்கப்பட்ட நூலில் இவரை மக்பூல் தரத்தில் தான் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-8297) - அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் சில இடங்களில் அபூஉபைதா இடம்பெறும் செய்திகளை கூறும் போது அவரை விமர்சித்துள்ளார். சில இடங்களில் சரியானது என்று கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-4882, 5411, அஹ்காமுல் ஜனாயிஸ், பக்கம்: 42) - இந்த செய்தியை திர்மிதீ இமாம் சரியானது என்று கூறுகிறார் என்பதை குறிப்பிடுவதுடன் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ள (ஹதீஸ் எண்-2829 இல் போரில் கொல்லப்பட்டவர் போக மேலும் ஏழு பேருக்கு ஷஹீத் அந்தஸ்து கிடைக்கும் என்ற) செய்தியில் உள்ள ஆட்சேபனைகளையும், விளக்கங்களையும் குறிப்பிட்டு நல்ல ஹதீஸ்களிலிருந்து பார்க்கும் போது 20 வகையான மனிதர்களுக்கு ஷஹீத் அந்தஸ்து கிடைக்கும் என்று தெரிகிறது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-6/50)
2 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஷஹீத் பற்றி வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-1639 , 1652 , 1653 , இப்னு மாஜா-2580 , அபூதாவூத்-4772 , திர்மிதீ-1421 , 1418 , நஸாயீ-4090 , 4091 , 4094 , 4095 ,
2 . நிலத்தை அபகரித்தல் பற்றி வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-1633 , 1640 , 1641 , 1643 , 1646 , 1649 , தாரிமீ-2648 , புகாரி-2452 , 3198 , முஸ்லிம்-3289 , 3290 , 3291 , 3292 ,
3 . இரண்டும் கலந்து வரும் செய்திகள்:
____________________________________________________________________________________________________
- தல்ஹா பின் அப்துல்லாஹ் —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-1628 ,1633 , 1642 , 1652 , 1653 , இப்னு மாஜா-2580 , அபூதாவூத்-4772 , திர்மிதீ-1421 , நஸாயீ-4090 , 4091 , 4094 , 4095 ,
- தல்ஹா பின் அப்துல்லாஹ் —> அப்துர்ரஹ்மான் பின் ஸஹ்ல் —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-1639 , 1641 , 1643 , 1646 , தாரிமீ-2648 , புகாரி-2452 , திர்மிதீ-1418 ,
- ஹிஷாம் —> உர்வா —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-1633 , புகாரி-3198 , முஸ்லிம்-3291 , 3292 ,
- அபூஸலமா —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
- முஹம்மது பின் ஸைத் —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-3290 ,
- அப்பாஸ் பின் ஸஹ்ல் —> ஸயீத் பின் ஸைத் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-3289 ,
மேலும் பார்க்க: புகாரி-2480 .
இந்த ஹதீஸ் வாக்கியத்தின் முதல் பகுதி ஸஹீஹ் புகாரி- 2480 உள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.