தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1642

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அர்வா பின்த் உவைஸ் என்ற பெண் சில குறைஷிகளுடன் என்னிடம் வந்தார். அவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அம்ர் பின் ஸஹ்ல் அவர்களும் இருந்தார். அந்தப் பெண் எங்களிடம், ஸயீத் பின் ஸைத், அவருக்கு உரிமையில்லாத என்னுடைய நிலத்தின் ஒருப்பகுதியை குறைத்து அவருக்கு எடுத்துக்கொண்டார். எனவே நீங்கள் அவரிடம் சென்று இதைப் பற்றி பேசவேண்டும் என்று கூறினார். நாங்கள் அவரிடம் சென்றோம்…

எங்களைக் கண்ட அவர், உங்களை இங்கே வரவைத்தது எது? என்று எனக்கு தெரியும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, “தனக்கு உரிமையில்லாத நிலத்தை யார் அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டப்படும். யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்” என்று எங்களுக்கு அறிவித்தார்.

(முஸ்னது அஹ்மத்: 1642)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ:

أَتَتْنِي أَرْوَى بِنْتُ أُوَيْسٍ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ، فِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرِو بْنِ سَهْلٍ، فَقَالَتْ: إِنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ قَدِ انْتَقَصَ مِنْ أَرْضِي إِلَى أَرْضِهِ مَا لَيْسَ لَهُ، وَقَدِ أحْبَبْتُ أَنْ تَأْتُوهُ فَتُكَلِّمُوهُ، قَالَ: فَرَكِبْنَا إِلَيْهِ وَهُوَ بِأَرْضِهِ بِالْعَقِيقِ، فَلَمَّا رَآنَا قَالَ: قَدْ عَرَفْتُ الَّذِي جَاءَ بِكُمْ، وَسَأُحَدِّثُكُمْ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُهُ يَقُولُ: «مَنِ أخَذَ مِنَ الأَرْضِ مَا لَيْسَ لَهُ، طُوِّقَهُ إِلَى السَّابِعَةِ مِنَ الأَرْضِين يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ قُتِلَ دُونَ مَالِهِ، فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1642.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1577.




மேலும் பார்க்க: திர்மிதீ-1421 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.