ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 1643)حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ، أَخْبَرَهُ: أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا فَإِنَّهُ، يُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1643.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1578.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். என்றாலும் இதில் ஸுபைதீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருப்பதால் சிலரின் கருத்துப்படி இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1421 .
சமீப விமர்சனங்கள்