தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16989

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

அபூஅப்துர்ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் அஹ்மத்) அவர்கள் கூறுகிறார்:

இந்த செய்தியில் இடம்பெறும் ஃபஸீலா என்பவரின் தந்தை வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) தான் என்று சில கல்வியாளர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் எனது தந்தை (அஹ்மத் இமாம்) இந்த செய்தியை வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களின் ஹதீஸ்களில் கடைசி செய்தியாக இதை சேர்த்துள்ளதை பார்த்துள்ளேன். எனவே இது வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களின் ஹதீஸ் என்பதால்தான் அவ்வாறு சேர்த்துள்ளார் என்று கருதுகிறேன்.

(முஸ்னது அஹ்மத்: 16989)

حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ كَثِيرٍ الشَّامِيُّ، مِنْ أَهْلِ فِلَسْطِينَ، عَنِ امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا: فَسِيلَةُ، أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ أَبِي، يَقُولُ:

سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا، وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يَنْصُرَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «سَمِعْتُ مَنْ يَذْكُرُ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ أَبَاهَا – يَعْنِي فَسِيلَةَ – وَاثِلَةُ بْنُ الْأَسْقَعِ، وَرَأَيْتُ أَبِي جَعَلَ هَذَا الْحَدِيثَ فِي آخِرِ أَحَادِيثِ وَاثِلَةَ، فَظَنَنْتُ أَنَّهُ أَلْحَقَهُ فِي حَدِيثِ وَاثِلَةَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16989.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16645.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ-அஷ்ஷாமீ என்பவர் மிகப் பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.