வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் முன்னால் சற்று அருகில் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ செல்லலாம்.
‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 18174)حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا الْمُبَارَكُ، قَالَ: أَخْبَرَنِي زِيَادُ بْنُ جُبَيْرٍ، أَخْبَرَنِي أَبِي، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي أَمَامَهَا قَرِيبًا عَنْ يَمِينِهَا، أَوْ عَنْ يَسَارِهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18174.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17805.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முபாரக் பின் ஃபளாலா தத்லீஸ் செய்பவர். என்றாலும் ஸியாத் பின் ஜுபைரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் வார்த்தையுடன் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : திர்மிதீ-1031 .
சமீப விமர்சனங்கள்