பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும் போது, தமது வலது கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு (வலது பக்கமாகச் சாய்ந்து படுத்து), “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தஜ்மஉ இபாதக” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! உனது அடியார்களை நீ ஒன்றுதிரட்டும் நாளில் உனது தண்டனையிலிருந்து என்னைக் காப்பாயாக!)
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அதாவது ஷுஅபா) கூறுகிறார்:
இதை அறிவிக்கும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், “யவ்ம தஜ்மஉ-ஒன்றுதிரட்டும் நாள்” என்று அறிவித்தார். வேறு சிலர், “யவ்ம தப்அஸு-எழுப்பும் நாள்”என்று அறிவித்தனர் என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 18472)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، وَرَجُلٍ آخَرَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، تَوَسَّدَ يَمِينَهُ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ»
قَالَ: فَقَالَ أَبُو إِسْحَاقَ، وَقَالَ الْآخَرُ: «يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18472.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
2 . ஹுதைஃபா பின் யமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
பல அறிவிப்பாளர் தொடரில் வரும் செய்தி
ஹூதைப்பா(ரலி)-சுனன் திர்மீதி-3398
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)-
இப்னு மாஜா-3877
உம்முல் முஃமினின் ஹப்ஸா(ரலி)
சுனன் அபூதாவூத்-5045, முஸ்னத் அஹ்மத்-26464
பராஉ பின் ஆஸிப் (ரலி) – முஸ்னத் அஹ்மத் 18672,18660,18472 ஸஹீஹ் முஸ்லிம்-709,710 சுனன் திர்மீதி-3399
இப்னு உமர்(ரலி) -நஸயீ குப்ரா-10592
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸாகல்லாஹு கைரா.
பலவகை அறிவிப்பாளர்தொடர்களில் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரே சரியானது என்பதால் இதை மட்டும் பதிவு செய்துள்ளோம். மற்றவை பற்றி விரிவான தகவல் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்வோம்.