ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடக்கும்… ஒருவரைக் கண்டால் அவரை தன் காலால் தட்டி, “இந்தத் தூக்கம் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரிய தூக்கமாகும்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 19458)حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ عَمْرٍو بْنِ الشَّرِيدِ، أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ، رَكَضَهُ بِرِجْلِهِ، وَقَالَ: «هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18639.
Musnad-Ahmad-Shamila-19458.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19022.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அஷ்ஷரீத் அவர்கள் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தியாகும்.
- வேறு அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தி நமக்கு கிடைத்தது என்று தான் அம்ர் பின் அஷ்ஷரீத் அவர்கள் கூறியுள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-19473 .
சமீப விமர்சனங்கள்