அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தார்களிடத்தில் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2053)حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«مَا قَاتَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا حَتَّى يَدْعُوَهُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-2001.
Musnad-Ahmad-Shamila-2053.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர், தத்லீஸ் செய்பவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும்.
- இந்த செய்தியை இப்னு அபூநஜீஹ் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் இந்த செய்தி சரியானதாகும். (பார்க்க: அஹ்மத்-2105 )
இந்த செய்தியில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எதிர்த்து சண்டைக்கு வந்தவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறை பற்றி கூறப்படுகிறது. இஸ்லாத்தை பரப்புவதற்கு போர் செய்யவில்லை. ஏனெனில் மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. மாறாக போர் செய்ய வந்தவர்களிடம் முதலில் இஸ்லாத்தைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும் என்று இந்த செய்தி கூறுகிறது.
பார்க்க:
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:256)
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2053 , 2105 , தாரிமீ-2488 , முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-11159 , 11269 , 11270 , 11271 , ஹாகிம்-37 , குப்ரா பைஹகீ-18232 , …
சமீப விமர்சனங்கள்