நபி (ஸல்) அவர்கள், மிகைத்தவனும், மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் (பின்வருமாறு) கூறியதாக அறிவித்தார்கள்:
நிச்சயமாக, நான் அநியாயம் இழைப்பதை என்மீது தடுத்துக் கொண்டேன். மேலும், என் அடியார்கள் அநியாயம் இழைப்பதையும் தடுத்துவிட்டேன். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
ஆதமின் பிள்ளைகள் அனைவரும் இரவிலும் பகலிலும் தவறிழைக்கக்கூடியவர்கள். பிறகு என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால், நான் அவர்களை மன்னிப்பேன்; அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன்.
மேலும், அல்லாஹ் கூறினான்:
ஆதமின் பிள்ளைகளே! நான் வழிகாட்டியவரைத் தவிர நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே. நான் ஆடை வழங்கியவரைத் தவிர நீங்கள் அனைவரும் நிர்வாணிகளே. நான் உணவளித்தவரைத் தவிர நீங்கள் அனைவரும் பசியுடையவர்களே. நான் நீர் புகட்டியவரைத் தவிர நீங்கள் அனைவரும் தாகமுடையவர்களே. எனவே, என்னிடம் வழிகாட்டுதலைக் கேளுங்கள். நான் உங்களுக்கு வழிகாட்டுவேன். என்னிடம் ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடை வழங்குவேன். என்னிடம் உணவு கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன். என்னிடம் நீர் கேளுங்கள். நான் உங்களுக்கு நீர் புகட்டுவேன்.
என் அடியார்களே! உங்களில் முதல்வரும், இறுதியானவரும், ஜின்களும், மனிதர்களும், சிறியோரும், பெரியோரும், ஆண்களும், பெண்களும் உங்களில் மிகவும் இறையச்சமுள்ள ஒருவரின் உள்ளத்தைப் போல் ஆகிவிட்டாலும், எனது ஆட்சியில் எதையும் அதிகரிக்க முடியாது.
(அப்துஸ் ஸமத் (அறிவிப்பாளர்) கூறும்போது, ‘உங்கள் நோயாளிகளும், ஆரோக்கியமானவர்களும்’ என்று சேர்த்துக் கூறினார்)
இன்னும், உங்களில் முதல்வரும், இறுதியானவரும், ஜின்களும், மனிதர்களும், சிறியோரும், பெரியோரும், ஆண்களும், பெண்களும் உங்களில் மிகவும் நன்றிமறந்த ஒருவரின் உள்ளத்தைப் போல் ஆகிவிட்டாலும், எனது ஆட்சியில் ஒரு ஊசியின் நுனி கடலில் குறைப்பதைப் போல அற்பமான அளவைக்கூட குறைக்க முடியாது.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 21420)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، وَعَبْدُ الصَّمَدِ، الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ عَبْدُ الصَّمَدِ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، وَقَالَ عَبْدُ الصَّمَدِ: الرَّحَبِيُّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ: «إِنِّي حَرَّمْتُ عَلَى نَفْسِي الظُّلْمَ، وَعَلَى عِبَادِي، أَلَا فَلَا تَظَالَمُوا. كُلُّ بَنِي آدَمَ يُخْطِئُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ثُمَّ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرُ لَهُ وَلَا أُبَالِي»
وَقَالَ: يَا بَنِي آدَمَ كُلُّكُمْ كَانَ ضَالًّا إِلَّا مَنْ هَدَيْتُ، وَكُلُّكُمْ كَانَ عَارِيًا إِلَّا مَنْ كَسَوْتُ، وَكُلُّكُمْ كَانَ جَائِعًا إِلَّا مَنْ أَطْعَمْتُ ، وَكُلُّكُمْ كَانَ ظَمْآنًا إِلَّا مَنْ سَقَيْتُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، وَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، وَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، وَاسْتَسْقُونِي أَسْقِكُمْ
يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَجِنَّكُمْ وَإِنْسَكُمْ وَصَغِيرَكُمْ وَكَبِيرَكُمْ وَذَكَرَكُمْ وَأُنْثَاكُمْ، قَالَ عَبْدُ الصَّمَدِ: وَعُيِيَّكُمْ وَبَيِّنَكُمْ، عَلَى قَلْبِ أَتْقَاكُمْ رَجُلًا وَاحِدًا، لَمْ تَزِيدُوا فِي مُلْكِي شَيْئًا، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَجِنَّكُمْ وَإِنْسَكُمْ وَصَغِيرَكُمْ وَكَبِيرَكُمْ وَذَكَرَكُمْ وَأُنْثَاكُمْ عَلَى قَلْبِ أَكْفَرِكُمْ رَجُلًا، لَمْ تُنْقِصُوا مِنْ مُلْكِي شَيْئًا إِلَّا كَمَا يُنْقِصُ رَأْسُ الْمِخْيَطِ مِنَ الْبَحْرِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20451.
Musnad-Ahmad-Shamila-21420.
Musnad-Ahmad-Alamiah-20451.
Musnad-Ahmad-JawamiulKalim-20898.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
3 . அப்துஸ்ஸமத் பின் வாரிஸ்
4 . ஹம்மாம் பின் யஹ்யா
5 . கதாதா
6 . அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத்
7 . அபூஅஸ்மா -அம்ர் பின் மர்ஸத்-அர்ரஹ்பீ
8 . அபூதர் (ரலி)
…
மேலும் பார்க்க: முஸ்லிம்-5033.
சமீப விமர்சனங்கள்