தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21546

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் இருக்கும் போது அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது அவர்கள், அபூதரே! நீ (தஹிய்யதுல் மஸ்ஜித்-பள்ளியின் காணிக்கைத் தொழுகை) தொழுதுவிட்டீரா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று கூற, அவர்கள் என்னிடம், “எழுந்து தொழுவீராக! என்று கூறினார்கள். எனவே நான் எழுந்து தொழுதுவிட்டு அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது அவர்கள், அபூதரே! மனித, ஜின் ஷைத்தான்களின் தீங்கைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பீராக! என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலும் ஷைத்தான்கள் உள்ளனரா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்….

நான், நபிமார்களில் முதல் நபி யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆதம் (அலை) என்று பதிலளித்தார்கள். நான் அவர் நபியா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆம், அல்லாஹ்விடம் பேசிய நபி என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ரஸூல்மார்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டேன். அதற்கவர்கள், 310 சொச்சம் என்று கூறினார்கள்.

(மற்றொரு தடவை) ரஸூல்மார்களின் எண்ணிக்கை 315 என்று கூறினார்கள் என்றும், நான், ஆதம் அவர்கள் நபியா? என்று கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம். அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று ‎கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது)

நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் மகத்தானது எது? என்று கேட்டேன். அதற்கவர்கள், அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் (எனத்துவங்கும் அல்குர்ஆன் 2.255) என்ற வசனமான ஆயத்துல் குர்ஸீ என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹமது: 21546)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، أَنْبَأَنِي أَبُو عُمَرَ الدِّمَشْقِيُّ، عَنْ عُبَيْدِ بْنِ الْخَشْخَاشِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ:

أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ فَجَلَسْتُ، فَقَالَ: “يَا أَبَا ذَرٍّ، هَلْ صَلَّيْتَ؟ ” قُلْتُ: لَا. قَالَ: “قُمْ فَصَلِّ ” قَالَ: فَقُمْتُ فَصَلَّيْتُ ثُمَّ جَلَسْتُ، فَقَالَ: “يَا أَبَا ذَرٍّ، تَعَوَّذْ بِاللهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، وَلِلْإِنْسِ شَيَاطِينُ؟ قَالَ: “نَعَمْ ”
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، الصَّلَاةُ؟ قَالَ: “خَيْرٌ مَوْضُوعٌ، مَنْ شَاءَ أَقَلَّ، وَمَنْ شَاءَ أَكْثَرَ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَالصَّوْمُ (1) ؟ قَالَ: “قَرْضٌ مُجْزِئٌ (2) ، وَعِنْدَ اللهِ مَزِيدٌ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَالصَّدَقَةُ؟ قَالَ: “أَضْعَافٌ مُضَاعَفَةٌ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَأَيُّهَا أَفْضَلُ؟ قَالَ: “جَهْدٌ مِنْ مُقِلٍّ، أَوْ سِرٌّ إِلَى فَقِيرٍ ”
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلُ؟ قَالَ: “آدَمُ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، وَنَبِيٌّ كَانَ؟ قَالَ: “نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، كَمِ الْمُرْسَلُونَ؟ قَالَ: “ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ، جَمًّا غَفِيرًا “، وَقَالَ مَرَّةً: “خَمْسَةَ عَشَرَ “، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، آدَمُ أَنَبِيٌّ كَانَ؟ قَالَ: “نَعَمْ، نَبِيٌّ مُكَلَّمٌ ”
قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّمَا أُنْزِلَ عَلَيْكَ أَعْظَمُ؟ قَالَ: “آيَةُ الْكُرْسِيِّ (اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ) [البقرة: 255] “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21546.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21013.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2410-அபூஉமர் அஷ்ஷாமீ, அத்திமிஷ்கீ என்பவர் பற்றி, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதில் வரும் ராவீ-27626-உபைத் பின் கஸ்காஸ் என்பவர் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் சிறிது பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். 

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/560, 3/35, தக்ரீபுத் தஹ்தீப்-1/1181, 1/649)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • (ரஸூல்மார்களின் எண்ணிக்கை பற்றி வரும் செய்திகளில், (அபூஜஃபர் அவர்களின் ஜுஸ்உ ஃபீ மஜ்லிஸானி-768) என்ற நூலில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார். (நாம் பார்த்தவரை இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இல்லை)
  • மேலும் நபிமார்களின் எண்ணிக்கை பற்றி வரும் சில மிக பலவீனமான செய்திகளைத் தவிர மற்ற சில செய்திகளை ஸஹீஹுன் லிகைரீ என்றும் கூறியுள்ளார்.
  • மேலும் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள், (தனது மவ்ளூஆத் என்ற நூலில்) அபூதர் (ரலி) வழியாக வரும் செய்தியை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியது சரியானதல்ல. ஹாகிம்-4166 இல் வேறு அறிவிப்பாளர்தொடரில் இது இடம்பெற்றிருப்பதால் முதாபத் என்ற அடிப்படையில் சரியானது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    (தக்ரீஜுல் கஷ்ஷாப்-30 இல் கூறியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் நபி, ரஸூல் என்ற வார்த்தையின் பொருள் பற்றி உள்ள கருத்துவேறுபாட்டை குறிப்பிட்டு இரண்டும் வெவ்வேறான பொருள் கொண்டவை என்றும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    கூறியுள்ளார். (சுருக்கம்)

(…அஸ்ஸஹீஹா-2668..ஆய்வில்.. )

….(அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎

இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎

அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்)…

1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21546 , 21552 , இப்னு ஹிப்பான்-361 ,

…இப்னு ஹிப்பான்-4166 , குப்ரா பைஹகீ-17711 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4092 .

3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11752 .

4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-6190 .

(இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள், தரங்கள் பிறகு சேர்க்கப்படும்)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.