…ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்…
(முஸ்னது அஹ்மத்: 22052)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ:
لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ خَرَجَ مَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِيهِ وَمُعَاذٌ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي تَحْتَ رَاحِلَتِهِ، فَلَمَّا فَرَغَ قَالَ: «يَا مُعَاذُ إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا وَلَعَلَّكَ أنَ تَمُرَّ بِمَسْجِدِي هَذَا، وَقَبْرِي» . فَبَكَى مُعَاذٌ جَشَعًا لِفِرَاقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ الْتَفَتَ فَأَقْبَلَ بِوَجْهِهِ نَحْوَ الْمَدِينَةِ فَقَالَ: «إِنَّ أَوْلَى النَّاسِ بِي الْمُتَّقُونَ مَنْ كَانُوا وَحَيْثُ كَانُوا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22404.
Musnad-Ahmad-Shamila-22052.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21483.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20390-ஆஸிம் பின் ஹுமைத் பற்றி இப்னுல் கத்தான் அவர்கள், இவர் பலமானவரா என்று நாம் அறியமாட்டோம் என்றும், பஸ்ஸார் அவர்கள், இவர் முஆத் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்டுள்ளாரா என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர். (இந்த இருவருக்கும் தெரியாமல் இருப்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகிவிடமாட்டார்).
- அபூஸுர்ஆ அவர்கள், ஷாம் நாட்டின் தாபிஈன்களில் பட்டியலில் இவரைக் கூறியுள்ளார்.
- இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவர் முஆத் (ரலி) அவர்களின் மாணவர் எனக் கூறியுள்ளனர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவரை பலமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/251)
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை பலமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். அத்துடன் இவர் அறியப்படாதவர் என்ற நிலையிலும் இல்லை என்பதால் கூட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றவர்கள் இவரை பலமானவர் எனக் கூறியிருக்கலாம். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை ஸதூக் என்ற வகையினரில் கூறியுள்ளார்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . பார்க்க: அஹ்மத்-22052 , 22053 , 22054 , முஸ்னத் பஸ்ஸார்-2647 , இப்னு ஹிப்பான்-647 , அல்முஃஜமுல் கபீர்-171 , 242 , குப்ரா பைஹகீ-17795 , 20151 ,
2 . அல்முஃஜமுல் கபீர்-241 ,
சமீப விமர்சனங்கள்