ஐந்து செயல்களை செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்.
1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.
2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.
3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.
4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.
5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22093)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ مُعَاذٍ قَالَ:
عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ: «مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22093.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21522.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பற்றி, நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற அடிப்படையிலும், இவரின் நூல் எரிந்து விட்டபின் மனனத்திலிருந்து இவர் அறிவித்ததால் அதிகமான தவறு ஏற்பட்டுவிட்டது என்றும் சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
ولما سئل أبو زرعة عن رواية القدماء عنه فقال: آخره وأوله سواء إلا أن ابن المبارك وابن وهب يتتبعان أصوله فيكتبان منه
وقال ابن مهدي: ما اعتد بشيء سمعته من حديث ابن لهيعة إلا سماع ابن المبارك ونحوه
وقال خالد بن خراش: رآني ابن وهب لا أكتب حديث ابن لهيعة، فقال: اني لست كغيري فاكتبها
وقال الفلاس: من كتب عنه قبل احتراق كتبه مثل ابن المبارك والمقري فسماعه صحيح
وقال أبو الطاهر بن السرح: سمعت ابن وهب يقول حدثني والله الصادق البار عبد الله بن لهيعة وكان أحمد بن صالح يثني عليه
وذكر الحافظ ابن حجر عن عبد الغني بن سعيد أنه قال: إذا روى العبادلة عن ابن لهيعة فهو صحيح: ابن المبارك وابن وهب والمقري وقال: وذكر الساجي وغيره مثله
وقال ابو جعفر الطبري: اختلط عقله في آخر عمره
وقال ابن حبان: كان أصحابنا يقولون سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة عبد الله بن وهب وابن المبارك وعبد الله بن المقرئ وعبد الله بن مسلمة القعنبي فسماعهم صحيح وكان ابن لهيعة من الكاتبين للحديث والجماعين للعلم والرحالين فيه
وقال الحافظ في التقريب: صدوق خلط بعد احتراق كتبه ورواية ابن المبارك وابن وهب عنه أعدل من غيرهما.
قلت: إذا قلنا إن رواية من روى عنه قبل الاحتراق كتبه صحيحه كما هو رأي كثير من الأئمة فرواية سفيان الثوري وشعبة والأوزاعي وعمرو بن الحارث المصري عنه صحيحة لأن هؤلاء الأربعة رووا عنه وماتوا قبل احتراق كتبه لأن كتبه احترقت سنة 169 والله أعلم (1) توفي رحمه الله سنة 174
(நூல்: அல்கவாகிபுன் நய்யிராத்-25)
- என்றாலும் இவரிடமிருந்து சில அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் சரியானது எனக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் யஸீத், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோர் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது.
- அவ்வாறே குதைபா பின் ஸயீத் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி உள்ளேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.
(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512)…
- என்றாலும் சிலர் இந்த வேறுபாட்டை ஏற்காமல் இப்னு லஹீஆ வை பலவீனமானவர் என்றே கூறுகின்றனர்.
இப்னு லஹீஆ பற்றிய கூடுதல் தகவல்: இப்னு லஹீஆ .
- எனவே இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் தனது ஸஹீஹாவில் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-3384) - இந்த வகை செய்திகள் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்களின் பார்வையில் ஹஸன் தரம் என்பதால் இதை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார். - இந்த செய்தியை இப்னு லஹீஆ தனித்து அறிவிக்கவில்லை. வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த செய்தி வந்துள்ளது…
1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —> முஆத் பின் ஜபல் (ரலி)
பார்க்க : அஹ்மத்-22093 , இப்னு குஸைமா-1495 , இப்னு ஹிப்பான்-372 , அல்முஃஜமுல் கபீர்-54 , 55 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8659 , ஹாகிம்-767 , 2450 , குப்ரா பைஹகீ-18539 ,
- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) —> முஆத் பின் ஜபல் (ரலி)
பார்க்க : ஹாகிம்-5180 ,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-3822 .
சமீப விமர்சனங்கள்