அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது நன்மை உனக்கு மகிழ்ச்சியையும், உனது தீமை உனக்கு வருத்தத்தையும் அளித்தால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளர்)” என்று கூறினார்கள்.
அவர், “அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது மனதில் எது உறுத்துகிறதோ (அதுவே பாவமாகும். எனவே) அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 22166)حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ أَبِي أُمَامَةَ،
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22166.
Musnad-Ahmad-Alamiah-21145.
Musnad-Ahmad-JawamiulKalim-21588.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ரவ்ஹ் பின் உபாதா
3 . ஹிஷாம் பின் அபூஅப்தில்லாஹ்
4 . யஹ்யா பின் அபூகஸீர்
5 . ஸைத் பின் ஸல்லாம்
6 . (அவரது பாட்டனார்) மம்தூர்-அபூஸல்லாம்
7 . அபூஉமாமா (ரலி)
இந்தச் செய்தியை யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து மஃமர், ஹிஷாம், அலீ பின் முபாரக்… ஆகியோர் அறிவித்துள்ளனர்.
المراسيل لابن أبي حاتم (ص241):
896 – سَمِعْتُ أَبِي يَقُولُ سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ زَيْدِ بْنِ سَلَامٍ شَيْئًا قَالَ أَبِي وَقَدْ سَمِعَ مِنْهُ
ميزان الاعتدال (4/ 403):
وروايته عن زيد بن سلام منقطعة لانها من كتاب وقع له.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48324-யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் பலமானவர். என்றாலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்றும் முர்ஸலாக (நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லாமல்) அறிவிப்பவர் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள், ஸைத் பின் ஸல்லாம் அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் நேரடியாக கேட்டதில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார்.
என்றாலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இப்னுமயீன் அவர்களின் கருத்தை மறுத்து, யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள், ஸைத் பின் ஸல்லாம் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற அறிஞர்கள், யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் ஸைத் பின் ஸல்லாம் அவர்களின் செய்தியை அவரின் நூலிலிருந்தே அறிவித்துள்ளார். இந்த நூல் ஸைத் அவர்களின் சகோதரர் முஆவியா பின் ஸல்லாம் அவரிடமிருந்து பெற்றதாகும் என்று கூறியுள்ளனர்.
வேறு சிலர் ஸைத் அவர்கள், யஹ்யா பின் கஸீருக்கு தனது நூலிலிருந்து அறிவித்துக் கொள்வதற்கு அனுமதி தந்துள்ளார் என்றும் அதன்படியே யஹ்யா அவர்கள் ஸைதிடமிருந்து நேரடியாக கேட்டது போன்று அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-896, மீஸானுல் இஃதிதால்-4/403, …)
- மேலும் இதில் வரும் ராவீ-45291-மம்தூர்-அபூஸல்லாம் அவர்கள், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளதாக அலாயீ அவர்கள் தனது துஹ்ஃபதுத் தஹ்ஸீலில் குறிப்பிட்டுள்ளார்.
تحفة التحصيل في ذكر رواة المراسيل (ص316):
وَقَالَ أَبُو حَاتِم ايضا روى عَن ثَوْبَان والنعمان بن بشير وَأبي امامة وَعَمْرو بن عبسة مُرْسل
(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/316)
ஆனால் இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்களின் மராஸீல், அல்ஜர்ஹு வத்தஃதீல் போன்ற நூல்களைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை. மம்தூர் அவர்கள், அம்ர் பின் அபஸா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று தான் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. (இந்த தகவலை பல அறிஞர்கள் கூறியுள்ளனர்)
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களே வேறு ஒரு செய்தியை பற்றி கூறும்போது, மம்தூர் அவர்கள் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் தான் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார். (இலல்-908)
المراسيل لابن أبي حاتم (ص215):
812 – سَمِعْتُ أَبِي يَقُولُ مَمْطُورُ أَبُو سَلَّامٍ الْأَعْرَجُ الْحَبَشِيُّ الدِّمِشْقِيُّ رَوَى عَنْ ثَوْبَانَ وَالنُّعمْاَن ابْن بَشِيرٍ وَأَبِي أُمَامَةَ وَعَمْرِو بْنِ عبسة مُرْسَلٌ
الجرح والتعديل – ابن أبي حاتم (8/ 431):
1972 – ممطور أبو سلام الاعرج الحبشى الدمشقي روى عن ثوبان والنعمان بن بشير وابى امامة وسلمى (3) مولى رسول الله صلى الله عليه وسلم وروى عن عمرو بن عبسة مرسل
علل الحديث لابن أبي حاتم ط-أخرى (1/ 303)
908- وسألتُ أبِي عَن حدِيثٍ ؛ رواهُ الولِيدُ بنُ مُسلِمٍ ، عن عَبدِ اللهِ بنِ العلاءِ بنِ زبرٍ ، أنّهُ سمِع أبا سلامٍ الأسود ، قال : سمِعتُ عَمْرو بن عبسة ، قال : صلّى بِنا النّبِيُّ صلى الله عليه وسلم إِلى بعِيرٍ مِن المغنمِ ، فلمّا سلّم أخذ وبرةً مِن جنبِ البعِيرِ ، فقال : ولا يحِلُّ لِي مِن غنائِمِكُم هذِهِ إِلاَّ الخُمسُ ، والخُمسُ مردُودٌ فِيكُم.
قال أبِي : ما أدرِي هذا ؟ لم يسمع أبُو سلامٍ مِن عَمرِو بنِ عبسة شيئًا ، إِنّما يروِي عن أبِي أُمامة عنهُ.
(நூல்கள்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-1/215, அல்ஜர்ஹு வத்தஃதீல்-1972, இலலுல் ஹதீஸ்-908)
எனவே முஸ்தஃபா அல்அதவீ போன்ற அறிஞர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்று கூறியிருப்பதற்கு காரணம் மம்தூர்-அபூஸல்லாம் அவர்கள், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார் என்ற தகவல் அடிப்படையில் ஆகும்.
(நூல்: ஸில்ஸிலதுல் ஃபவாஇத்-7/115-116)
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் பின் ஸல்லாம் —> மம்தூர்-அபூஸல்லாம் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: ஜாமிஉ-மஃமர்-20104, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21021, ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-825, முஸ்னத் இப்னுல் முபாரக்-28, அஹ்மத்-22166, 22159, 22199, முஸ்னத் ஹாரிஸ்-11, முஸ்னத் ரூயானீ-1255, இப்னு ஹிப்பான்-176, அல்முஃஜமுல் கபீர்-7539, அல்முஃஜமுல் அவ்ஸத்-2993, அல்ஈமான்-இப்னு மன்தஹ்-1088, 1089, ஹாகிம்-33, 34, 35, 2171, 7047, ஷரஹு உஸூலு-1665, முஸ்னத் ஷிஹாப்-401, 402, ஷுஅபுல் ஈமான்-5362, 6594, 6595,
- ஜாமிஉ-மஃமர்-20104.
جامع معمر بن راشد (11/ 126)
20104 – أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: مَا الْإِثْمُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا حَاكَ فِي صَدْرِكَ فَدَعْهُ» ، قَالَ: فَمَا الْإِيمَانُ؟ قَالَ: «مَنْ سَاءَتْهُ سَيِّئَاتُهُ، وَسَرَّتْهُ حَسَنَتُهُ، فَهُوَ مُؤْمِنٌ»
- ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-825.
الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 284)
825 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ يَقُولُ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ: مَا الْإِثْمُ؟ قَالَ: «مَا حَكَّ – أَوْ مَا حَاكَ – فِي صَدْرِكَ فَدَعْهُ» ، قَالَ: فَمَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَاءَتْكَ سَيِّئَتُكَ، وَسَرَّتْكَ حَسَنَتُكَ، فَأَنْتَ مُؤْمِنٌ»
- முஸ்னத் இப்னுல் முபாரக்-28.
مسند عبد الله بن المبارك (ص: 15)
28 – حَدَّثَنَا جَدِّي، نَا حَبَّانُ، أَنا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ , عَنْ جَدِّهِ , قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ , يَقُولُ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِثْمُ؟ قَالَ: «مَا حَاكَ فِي صَدْرِكَ فَدَعْهُ» . قَالَ: فَمَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَاءَتْكَ سَيِّئَتُكَ , وَسَرَّتْكَ حَسَنَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ»
- முஸ்னத் ஹாரிஸ்-11.
مسند الحارث = بغية الباحث عن زوائد مسند الحارث (1/ 156)
11 – حَدَّثَنَا رَوْحٌ، ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ , عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» , قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَمَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَكَّ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ»
- முஸ்னத் ரூயானீ-1255.
مسند الروياني (2/ 306)
1255 – نَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ، نَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ يَقُولُ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِثْمُ؟، قَالَ: «مَا حَاكَ فِي صَدْرِكَ فَدَعْهُ» ، قَالَ: فَمَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَاءَتْكَ سَيِّئَاتُكَ، وَسَرَّتْكَ حَسَنَاتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ»
- அல்ஈமான்-இப்னு மன்தஹ்-1088, 1089.
الإيمان لابن منده (2/ 984)
1088 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِصَامٍ، ثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، ثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟، فَقَالَ: «إِذَا سَاءَتْكَ سَيِّئَتُكَ وَسَرَّتْكَ حَسَنَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . قَالَ: فَمَا الْإِثْمُ؟، فَقَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ»
الإيمان لابن منده (2/ 984)
1089 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ، ثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرِ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ أَبِي أُمَامَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟، قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَاتُكَ وَسَاءَتْكَ سَيِّئَاتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِثْمُ؟، قَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ»
- ஷரஹு உஸூலு-1665.
شرح أصول اعتقاد أهل السنة والجماعة (5/ 993)
1665 – أنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، نا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ ثَابِتٍ، قَالَ: نا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: نا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أنا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَامٍ، عَنْ أَبِي سَلَامٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْإِيمَانِ فَقَالَ: «مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَهُوَ مُؤْمِنٌ»
- முஸ்னத் ஷிஹாப்-401, 402,
مسند الشهاب القضاعي (1/ 248)
401 – أنا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَاجِّ أنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، نا أَبُو الْمُنْذِرِ، مُحَمَّدُ بْنُ سُفْيَانَ بْنِ الْمُنْذِرِ نا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ، نا عَبْدُ الرَّزَّاقِ، أنا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ أَبِي سَلَّامٍ , عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، أَنَّ رَجُلًا، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِثْمُ؟ قَالَ: «مَا يَحِيكُ فِي نَفْسِكَ فَدَعْهُ» ، قَالَ: فَمَا الْإِيمَانُ؟، قَالَ: «مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ، وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَهُوَ مُؤْمِنٌ»
مسند الشهاب القضاعي (1/ 249)
402 – أنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ الْمُعَدِّلُ، أنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، نا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الصَّائِغُ، أنا رَوْحٌ، نا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ أَبِي سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ، وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَهُوَ مُؤْمِنٌ»
- யஹ்யா பின் அபூகஸீர் —> ஸல்லாம் பின் அபூஸல்லாம் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7540, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-233, …
- முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-233.
مسند الشاميين للطبراني (1/ 145)
233 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عِرْقٍ الْحِمْصِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مُصَفًّى، ثنا بَقِيَّةُ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ سَلَّامِ بْنِ أَبِي سَلَّامٍ الْحَبَشِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَائَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ»
…
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4992,
ஷுஐப் அர்னாவூத் இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் என கூறியுள்ளார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. என்றாலும் இதில் மம்தூர்-அபூஸல்லாம் அவர்கள், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதைப் பற்றிய தகவல் சரியானதா? என்பதை பார்த்துவிட்டு தரம் பதிவிடுகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹனபி மத்ஹபை சார்ந்தவர்கள் தொழும் போது அத்தஹியாத்தில் அஷ்ஹது என்று வரும்போது ஆட்காட்டி விரலை உயர்த்தி கீழே விடுகிறார்கள் அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
இந்த செய்தியை அதன் விமர்சனத்துடன் பதிவு செய்யுங்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.