தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22315

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு) ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து, தொழ ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் எழுந்து, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வலீத் பின் அபூமாலிக் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 22315)

حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي مَالِكٍ قَالَ:

دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» قَالَ: فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22315.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21727.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அல்வலீத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரஹ்)
    நபித்தோழர் அல்ல. எனவே இது முர்ஸலான செய்தி.

சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-11019 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.