அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி, கடன், ஆணவம் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22428)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، وَبَهْزٌ قَالَ:، حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ: بَهْزٌ، عَنْ سَالِمٍ، عَنْ مَعْدَانَ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ، وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ: الْغُلُولِ وَالدَّيْنِ،
قَالَ بَهْزٌ، وَالْكِبْرِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21392.
Musnad-Ahmad-Shamila-22428.
Musnad-Ahmad-Alamiah-21392.
Musnad-Ahmad-JawamiulKalim-21838.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கதாதா தத்லீஸ் செய்பவர் என்றாலும் இவரிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் அறிவிப்பது சரியானவையாகும். காரணம் ஷுஃபா அவர்கள், கத்தாதாவிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஸாலிம் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க: திர்மிதீ-1572.
2 . ஸாலிம் —> மஃதான் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க: அஹ்மத்-22428, 22369, 22390, 22427, 22434, தாரிமீ-2634, இப்னு மாஜா-2412, திர்மிதீ-1573, முஸ்னத் பஸ்ஸார்-4159, குப்ரா நஸாயீ-8711, இப்னு ஹிப்பான்-198, அல்முஃஜமுல் அவ்ஸத்-7751, ஹாகிம்-2217, 2218, குப்ரா பைஹகீ-10964, 18208,
இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்