அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(திர்மிதி: 1572)حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الكِبْرِ، وَالغُلُولِ، وَالدَّيْنِ دَخَلَ الجَنَّةَ
وَفِي البَاب عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1497.
Tirmidhi-Shamila-1572.
Tirmidhi-Alamiah-1497.
Tirmidhi-JawamiulKalim-1495.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16717-ஸாலிம் பின் அபுல் ஜஃத் பலமானவர் என்றாலும் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியேற்கவில்லை என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் கூறியுள்ளனர். - மேலும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் பின் அபூதல்ஹா இடம்பெறவேண்டும் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 10/130)
எனவே இதில் மஃதான் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் என்பவர் கூறப்பட்டும் இந்த செய்தி வந்துள்ளது. அவை சரியானவைகளாகும்.
- மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கத்தாதா தத்லீஸ் செய்பவர் என்றாலும் இவரிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவிப்பது சரியானவையாகும். காரணம் ஷுஃபா அவர்கள், கத்தாதாவிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை முஸ்னத் அஹ்மத்-22428 , முஸ்னத் பஸ்ஸார்-4159 ஆகிய எண்களில் கத்தாதாவிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும்.
இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஸாலிம் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : திர்மிதீ-1572 .
2 . ஸாலிம் —> மஃதான் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : அஹ்மத்-22369 , 22390 , 22427 , 22428 , 22434 , தாரிமீ-2634 , இப்னு மாஜா-2412 , திர்மிதீ-1573 , முஸ்னத் பஸ்ஸார்-4159 , குப்ரா நஸாயீ-8711 , இப்னு ஹிப்பான்-198 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7751 , ஹாகிம்-2217 , 2218 , குப்ரா பைஹகீ-10964 , 18208 ,
இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
ஹதீஸ் தரம் போடவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்.
கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
நன்றி
ஆனால் எல்லா அறிவிப்பிலும் கதாதா இடம் பெறுவதாகவும் அவர்
ஹதீஸில் இருட்டடிப்பு செய்யக்கூடிய முதல்லிஸான அறிவிப்பாளர். எனவே கதாதா தான் யார் வழியாக அறிவிக்கிறாரோ அந்த அறிவிப்பாளரான சாலிமிடம் இவர் ஹதீஸ் செவியுற்றுள்ளார் அல்லது சாலிம் கதாதா வின் ஆசிரியர் என நிரூபணமாகாவிட்டால் இது பலவீனமான ஹதீஸாகிவிடும். என்று ஒரு நண்பர் கூறினார், இந்த கறுத்து சரியானதா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தியை கதாதா அவர்களிடமிருந்து ஷுஃபா அவர்களும் அறிவித்துள்ளார். கதாதா விடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவித்தால் அதில் தத்லீஸ் இல்லை என்பது பிரபலமான சட்டமாகும்.
வ அலைக்குமுஸ் ஸலாம் ஆம் இன்னுமொரு மவ்லவியும் ஷஃபா இடம் பெறுவதால் தத்லீஸ் இல்லை என்று தான் சொன்னார். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.