ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் செய்யவேண்டிய ஒரு தர்மத்தை பற்றி எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிறருக்கு) தண்ணீர் வழங்குவாயாக! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 22458)حَدَّثَنَا هَاشِمٌ، أَخْبَرَنَا الْمُبَارَكُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ:
مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى صَدَقَةٍ. قَالَ: «اسْقِ الْمَاءَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22458.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21869.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين الحسن البصري وسعد بن عبادة الأنصاري ، وباقي رجاله ثقات عدا مبارك بن فضالة القرشي وهو صدوق يدلس ويسوي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. மேலும் முபாரக் பின் ஃபளாலா தத்லீஸ் செய்பவர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-22458 , 22459 , 23845 , நஸாயீ-3650 , 3664 , 3665 , 3666 , இப்னுமாஜா-3684 , அபூதாவூத்-1679 , 1681 , மாலிக்-2261 ,
சமீப விமர்சனங்கள்